பக்கம்:தமிழ் மணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 தமிழ் மணம் களுக்கும் கம்பனை ஒட்டிப் பொருள் கூறும் இடங்களும் உண்டு. சுக்கிரீவனோடு கிடந்த தாரை, இருந்தது இருந்தபடி யாக இலக்குவனைக் காண வரும் பகுதியை விளக்கும் நம் பிள்ளை, தன் மகனைக் காண வரும் தாய்போல் என்ற உவமை யைக் கையாளுவது கம்பராமாயணம் கற்ற கைவன்மையே ஆகும். கோவிந்த ராசீயம் என்று வான்மீகிக்கு உள்ள உரை யும் இத்தகையது எனலாம். மலையாள நாட்டில் கம்பனைச் சிவனது அவதாரம் என்று போற்றுவர். கம்பராமாயணத் தைப் படிக்க அங்கே கட்டளைகள் உண்டு. கம்பராமா யணத்தை 32 பாவைக் கூத்துக்களாக்கிக் கோவில் திருவிழா வில் காட்டுவது இன்றும் வழக்கமாம். 14-ஆம் நூற்றாண் டைய கன்னடக் கல்வெட்டு, கம்பராமாயணப் பிரசங்கத்தில் கைதேர்ந்தவர்களைக் குறிக்கின்றது. கம்பராமாயணக் கதை, தெலுங்கில் வந்த இராமாயணங்களில் புகாமை வியப்பே ஆகும். துளசிதாசர் பாடிய இந்தி இராமாயணம் வடநாட்டில் தலைசிறந்து விளங்கி, மக்கள் மனத்தை நீர்ப்பிண்டமாக்குவது. இதில் உள்ள பாலகாண்டம், கம்பராமாயணப் பகுதிகள் பலவற்றை நினைப்பூட்டும். இப்பகுதியைத் துளசிதாசர் முதலில் எழுதியபின் திருத்திப் பெருக்கினார் என்று கூறுவ துண்டு. துளசிதாசர் இராமேசுவரம் வரை யாத்திரையாக வந்து போனவர். நேரே தமிழ்ப் பாட்டைத் தம் நூலில் புகுத்தினார் என்று சொல்வதற்கு இல்லை; தமிழ்நாட்டிற்கு வந்து போனபோது இங்கு வழங்கிய கம்பராமாயணக் கதையையும் கேட்டிருப்பார் என்று கருத இடம் உண்டு. வில் வளைப்பதற்குமுன் இராமனும் சீதையும் காதல் கொண்ட பகுதி கம்பராமாயணத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது. சுயம்வரததிற்குமுன் இருவரும் காதலிக்கும் கதை கம்ப னுக்கு முன்னும் உள்ளதே. ஆனால், துளசிதாசர் கூறுவது கம்பர் கூறுவதுபோலவே உள்ளது என்பதே இங்குக் குறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/52&oldid=1480454" இலிருந்து மீள்விக்கப்பட்டது