பக்கம்:தமிழ் மணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10. தமிழ்நாட்டில் பௌத்தம் பௌத்த மதம் உலகப் பொதுமதமாக எழுந்து உலகம் முழுதும் பரவியதாகலின் தமிழ்நாட்டிலும் வேர்கொண்டு பரந்து வளர்ந்தது. அசோகரது கல்வெட்டு, அப் பேரரசர் தம் அறக் கொள்கைகளைச் சோழ பாண்டியர்களது நாட்டிலும் நிலைநாட்டினார் எனக் கூறுகிறது. அசோகருடைய மகனார் மகேந்திரனார் கி.மு 250-இல் இலங்கையில் பௌத்த மதத் தினைப் பரப்பச் சென்றார். இவருடைய பெயர் இலங்கையில் மகிந்தர் என வழங்கும். இவருடன் அறத் தொண்டு புரிந் தவர் இலங்கை அரசரின் உறவினரான அரிட்டர் என்பவ ராவர். மகேந்திரர் தமிழ்நாட்டு வழியாகவே சென்றிருத்தல் வேண்டும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் பௌத்த சின்னங் களைத் தேடிவந்த யுவான்சுவாங் என்ற சீனப் பெருமகனார் தமிழ்நாட்டினைச் சுற்றிவந்தபோது, இந்த மகிந்தர் கட்டிய தாக வழங்கிய பௌத்தப் பள்ளி ஒன்று மதுரையில் இருந் ததனைப்பற்றித் தம் நூலில் குறித்துவைத்துள்ளார். இந்த மகிந்தருடன் தொண்டாற்றிய அரிட்டர் பெயர் அரிட்டபாடி என்ற இடப்பெயரில் இன்றும் நின்று நிலவுகிறது. மகிந்தர் காலத்து எழுத்துக்கள் வெட்டிய குகைகள் இந்த அரிட்டபாடி என்ற பாண்டிநாட்டு ஊரருகே உள்ளன. தமிழ்நாட்டில் இன்று கிடைக்கும் இந்தப் பழைய எழுத்துக்கள் இவ்வாறு பௌத்தப் பள்ளிகளோடு தொடர்பு பெற்றுத தமிழ்நாட்டுத் தென்கோடியிலும் காட்சி அளிக்கின்றன. எழுத்தறிவு ஊட் டும் நிலையங்கள் இன்று பள்ளிக்கூடங்கள் எனப் பெயர் பெறுவது பொருத்தமே ஆம். எனவே, பெளத்தப் பேரறம் கிறித்தவ ஊழிக்கு முன்பே தமிழ்காட்டில் சீரும் சிறப்பும் பெற்று ஓங்கியது எனலாம். போதியார் எனச் சம்பந்தர் பெளத்தர்களைக் குறிக்கின் றார். ஆதலால். இளம்போதியார் என்ற சங்கப் புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/59&oldid=1480462" இலிருந்து மீள்விக்கப்பட்டது