பக்கம்:தமிழ் மணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 தமிழ் மணம் பௌத்தப் பாவாணரே ஆவர். சங்கப் பாக்களில் பௌத்தக் கொள்கைகள் பாவடிவம் பெற்று மக்கள் மனத்தினைக் கவர்ந் திருத்தல் வேண்டும். இளம்போதியார் என்ற பெயரே போதியார் என மற்றொரு மூத்த தமிழ்ப் பாவாணர் இருந் த்தனை நிலைநாட்டுகிறது. சங்கப் புலவராம் சீத்தலைச் சாத்த னாரும் மணிமேகலை என்ற பெளத்தப் பெருங்காப்பியத்தி னைப் பாடிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் ஒருவரே என்ற கொள்கையும் உண்டு. அப்படியானால். அவரும் பௌத்தரேயாவர். பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பவும் புத்தர் பெருமைகளைப் பேசவும் எழுந்தது அந்தக் காப்பியம். உயர்ந்தோர் இழிந்தோர் என்று பிறர் கருதுவதுபோலக் கருதாமல் சமுதாயத் தொண்டினைப் பௌத்தப் பெருமக்கள் செய்துவந்ததனை அந்தத் தமிழ்ப் பெருங்காப்பியம் பரக்கப் பேசுகிறது. மணிமேகலை பொதுமகள் குலத்தில் பிறந்தும் பௌத்த பிக்குணியாகிப் பௌத்த மத அறவுரைகளை வழங்கி அறம் வளர்த்து உயர்நிலை அடைந்த கதையன்றோ அக் கதை? மகாயாக பெளத்தம் எழுவதற்கு முன்னர்ப் புத்தருக்குக் கோயில் கட்டி வழிபடாமல் அவருடைய திருவடி நிலைகளை மட்டும் வணங்கிய காலத்தில் எழுந்தது மணி மேகலை. அதில் காணும் மந்திர தந்திரங்கள் மகாயாந பௌததம் தோன்றுவதற்கு வழிகோலுகின்றன எனக் கூறலாம். வடநாட்டில் அமைதியின்மையால் பல நூல்கள் தென் னாட்டிற் புகுந்து வளர்ந்தோங்கிய நிலையை மணிமேகலையில் காண்கிறோம். பட்டி மண்டபம் என்பது தமிழ்நாட்டின் அரிய நிலையம். அறிவாராய்ச்சி செய்வார் வெறுப்பு விருப் பின்றி உண்மையை அறிய முயலும் மன்றம் அது. மதங்களின் கொள்கைகளையும் மணிமேகலை அறிய முயல் கின்றாள். இதனை ஒரு காப்பியப் பெருவாய்ப்பாகக்கொண்டு சாத்தனார் சர்வமத சங்கிரகமே ஒன்று பாடுகின்றார். சர்வமத பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/60&oldid=1480463" இலிருந்து மீள்விக்கப்பட்டது