பக்கம்:தமிழ் மணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் பெளத்தம் 61 சங்கிரகம் எழுதும் வழக்கம் மணிமேகலையில் முளை விடு கிறது எனலாம். இதிலிருந்து புதுவகைக் காப்பியங்கள் தமிழில் வளர்ந்தன. நீலகேசி, குண்டலகேசி எனக் கேசி என முடியும் பெயருள்ள காப்பியங்களை நோக்குதல் வேண் டும். ஒரு பெண் உண்மையை அறிய முயன்று பலமதக் கொள்கையினரோடும் வாதம் செய்து தான் கொண்ட உண்மையினை நிலைநாட்டுவதனைக் கூறும் காப்பியங்களே இவை எனலாம். தத்துவப் போராட்டம் காப்பியமாக வள ரும் காட்சியைத் தமிழ்நாட்டில் இந்த நூல்களிலே காண் கிறோம். மணிமேகலைக் காப்பியமே இவற்றிற்குத் தாயக மாம், குண்டலகேசி என்பது பௌத்தக் கொள்கையைக் குண் டலகேசி என்ற பெண் நிலைநாட்டிப் பிற மதங்களைத் தகர்த் தெறிந்ததனைப் பாடுகின்றது என அறிகின்றோம். சில பாடல்கள் அன்றி இந்தக் காப்பிய முழுதும் இன்று கிடைக்க வில்லை. இதனைப் பாடியவர் நாதகுத்தர் என நீலகேசி கூறு கின்றது. மணிமேகலைக் காப்பியம் பௌத்த தருக்கநூல் வளர்ந்த வரலாற்றையும் அறிய வழி செய்கின்றது. அங்குக் கூறப் பெறும் தருக்கமுறை, தருமபாலர் என்பவர் எழுதியதாகச் சீன நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பெற்ற நூலோடு பெரி தும் ஒத்திருக்கக் காண்கிறோம். இந்தத் தருக்கமுறை தமிழ் நாட்டுப் பௌத்தர்களிடையே வளர்ந்தது என்பது இதனால் தெளிவாகிறது. தருக்கத்தினைத் தமிழ்க் காப்பியத்திற் புகுத்திப் பாக்களை அறிவுலகப் பாக்களாகத் திகழச் செய்த பௌத்தர்கள் முயற்சி, மணிமேகலைக் காப்பியத்தில் நன்கு விளங்குகிறது. பல்லவர் காலத்திலும் பௌத்தர்கள் தமிழ் வளர்த்துத் தமிழ்நாட்டில் பரவி இருந்தாலும் யுவான்சுவாங் பௌத் தர்கள் ஏற்றம் கீழ்நோக்கிச் சென்றிருந்ததனையே கண்ட தாகக் குறிக்கின்றார். சோழப் பேரரசு வளர்ந்த நாளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/61&oldid=1481070" இலிருந்து மீள்விக்கப்பட்டது