பக்கம்:தமிழ் மணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 தமிழ் மணம் பௌத்தம் மறையவில்லை. பதினோராம் நூற்றாண்டில் அர சாண்ட வீரராசன் அவைக்களத்தில் வீரசோழியம் என்ற இலக்கண நூல் அரங்கேறியது. இதனை இயற்றியவர் தஞ்சைப் பொன்பற்றி என்ற ஊரில் பிறந்த புத்தமித்திரன் என்ற பௌத்தரே ஆவர். இதற்கு உரை எழுதிய பெருந் தேவனாரும் இவர் காலத்தவர் என்றே தெரிகிறது. இவர் பெளத்த மதப் பாடல்கள் பலவற்றைத் தம் உரையில் காட்டி யிருப்பதாலேயே அந்தப் பழம்பாடல்கள் இன்றளவும் வாழ்ந்துவருகின்றன. இலக்கணத்தை வளர்த்த பெருமை யும் பெளத்தர்களுக்கு உண்டு. இந்த இலக்கண நூல் வட மொழி இலக்கண வழக்காற்றினைத் தமிழுக்கும் பொருத்திக் காட்டும் புதிய முயற்சியில் புகுகின்றது. பிரயோக விவே கம் என்ற பின்னாளைய இலக்கண நூல் வீரசோழியம் வளர்த்த பிள்ளையே எனலாம். திராவிட மொழிகளையும் வடமொழியின் பிராகிருத வடிவங்களே என்று கூறுவோர். இந்த இலக்கணப் பரம்பரையைச் சேர்ந்தவர்களே ஆவர். பௌத்த தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களும் நூல் களும் எத்தனையோ இருத்தலவேண்டும். வீரசோழிய உரை யில கண்டவை போகப் பிறநூல் உரைகளும் சில பௌத்த நூல்களின் இருப்பினை வெளியிடுகின்றன. நீலகேசியுரை சிவஞான சித்தியாரின் ஞானப்பிரகாசர் உரை, தக்க யாகப் பரணியுரை என்பன இந்த வகையில் வழிகாட்டுகின்றன. 'வன்பசிக் கடும்புலிக்கு உடம்பு அளித்து உடம்பின்மேல் வாள் எறிந்த வாயினூடு பால் சுரந்து" என்ற பாடற் பகுதி பின்னைய நூலால் வெளியாகிறது. இது புத்தரைப் பாடிய பாடலாதலின் இதனைப் பாடியவர் பௌத்தரே எனலாம். இவரைக் கவியரசர் என அந்த உரை அழைக்கின்றது. சித் தாந்தத் தொகை, திருப்பதிகம் என்ற பெளத்த நூல்களை முன்னைய இரண்டு நூல்களும் பௌத்தக் கொள்கையை விளக்க எடுத்துக்காட்டுகின்றன. விம்பசார கதை என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/62&oldid=1481071" இலிருந்து மீள்விக்கப்பட்டது