பக்கம்:தமிழ் மணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 தமிழ் மணம் யைக் காண்கிறோம். அதிகார மோகத்தின் திருவிளையாடல் இது. பௌத்த மதம் தமிழ்நாட்டில் மறைந்ததன் காரணமும் ஒருசிறிது வெளியாகிறது. வைதுல்ய மதத்தின் தலைவராகச் சங்கமித்திரர் சோழநாட்டிலிருந்து சென்றனர் என அறி கிறோம். ஒருசிலர், இவரே மாணிக்கவாசகர் என மருள் கின்றனர். காதலைத் துறவாது வாழக்கூடிய கடவுட் காமத் தினைத் தமிழர் கண்ட அகப்பொருள் நெறி வற்புறுத்து கிறது: இது பௌதத தந்திரங்களில் இடம் பெற்றுள்ளமை அறிவோம். பௌததத் துறவிகள் காதலைத் துறவாது நிற்க லாம் என்ற கொள்கை வைதுல்யரின் கொள்கை < என இலங்கை நூல்கள் வழியே அறிகிறோம். பிற மதத்தினரோ டன்றித் தம்முள் தாமே பௌத்தர்கள் வாதாடினர். பலபல பிரிவுகள் தோன்றின எனப் பெளத்த நூல்கள் விளக்கு கின்றன. பின்வந்த தமிழ்நூல்களில் இந்தச் சிறு பிரிவு களைக் காணோம். சௌதராந்திகர். வைபாஷிகர். யோகா சாரர். மாத்தியமிகர் என்ற நான்கு பிரிவுகளைப்பற்றி மட்டுமே பேசக் கேட்கிறோம். நான்காம் நூற்றாண்டில் புத்த நந்தியோடும். சாரி புத்தரோடும் வாதிட்டு வென்ற ஞான சம்பந்தர், 'அறுவகைத் தேரர்" எனப் பாடுவதால் அவர் காலத்திலும் பலபல பிரிவுகள் இருந்தமை புலனாகிறது. இவர் செய்த வாதத்தினைக் கன்னபரம்பரையாகக் கேட் டறிந்த சேக்கிழார் பெரியபுராணத்தில் தேரர் கொள்கை களும் அவற்றின் மறுப்புமாகப் பாடிவைத்துள்ளார். மணிமேகலை, காஞ்சியில் வாழ்ந்த அறவண அடிகளை அடுத்து வழிபட்டதனை மணிமேகலை என்னும் காப்பியம் பாடுகிறது. காஞ்சி மாநகரம் ஒரு சிறந்த தமிழ்ப் பல்கலைக் கழகம்: பௌத்தப் பள்ளிகள் பல வளர்ந்த இடம். காஞ்சி யில் பிறந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவரான திந்நாகரும் தமிழரே. அவர் மாணவராய் அந்தப் பல்கலைக் கழகத்தில் தலைவராக விளங்கிய தருமபாலரும் தமிழரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/64&oldid=1481438" இலிருந்து மீள்விக்கப்பட்டது