பக்கம்:தமிழ் மணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் பௌத்தம் 65 இவர் காஞ்சியில் மந்திரியாயிருந்த தமிழ்ப் பெரியார் ஒருவ ரின் செல்வப் புதல்வர். இவர் கையாண்ட தருக்கமுறை தமிழ்நாட்டில் வளர்ந்ததொன்று என முன்னரே குறிப்பிட் டோம். இதனால் இவரே மணிமேகலையில் வரும் தருமபாலர் என முடிவு செய்வோரும் உளர். மணிமேகலையின் காலம் இரண்டாம் நூற்றாண்டானால், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், அவர் ஆதற்கு இல்லை; எனினும் காஞ்சி மாநகர் பௌத்தப் பேரறிஞர்களது அறிவுக்களஞ்சியமாக உலகம் முழுதும் பேர்பெற்றிருந்தது என்பதில் ஐயம் இல்லை. நாளந் தாப் பல்கலைக் கழகம் ஒருபுறமிருக்க, உலகம் போற்றும் சென்பௌத்தம் காஞ்சிநகர் கண்டதே ஆம். உலகத்தில் இன்று நிலவும் பௌத்த மதப் பெரும்பிரிவு சென்பௌத்தம் அல்லது தியான பௌத்தம் என்பதேயாம். சீனாவிலும். அதனை விட ஜப்பானிலும் இது பேரும் புகழும் பெற்று விளங்குகிறது. இதனை அங்குச் சென்று கி.பி.ஆறாம் நூற்றாண்டில் நிலைநாட்டியவர் காஞ்சியரசரின் பிள்ளைகளில் ஒருவரான போதிதரும ராவர். இந்த மதத்தினைச் சீனாவில் மேலும் வளர்த்தவர் கரசிங்க வனம பல்லவன் காலத்தவ ரான மற்றொரு தமிழர்; இவர் பெயர் வச்சரபோதி. இவரும் காஞ்சியில் பெளத்தர்களுக்குத் தலைவராக விளங்கினார். இவர்களுக்கு முனபே ஐந்தாம் நூற்றாண்டிலும் புத்த தத்தத் தேரர் காஞ்சியில் பௌத்த மதத் தலைவராக வீற்றிருந்துள்ளார். இவர் காவிரிப்பூம்பட்டினத்தைத் தமது காலத்தில் வாழ்ந்த அச்சுதக் களபரனோடு சேர்த்துப் புனைந்து அபிதம்மாவதாரம் என்ற நூலில் பாடிப் புகழ் கின்றார். முதல் நூற்றாண்டிலும் காஞ்சி பேர்பெற்று விளங் கியது. அந்த கட்டஹ காதை' அந்தக மொழியில் அந்தக நாட்டில் பரசமுத்ர வாசிகளால் காஞ்சியில் கொண்டாடப் பட்டதாகப் பாலி நூல்கள் வழியே அறிகின்றோம். பதி னோராம் நூற்றாண்டில் தீபாங்கர தேவரும் பன்னிரண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/65&oldid=1481439" இலிருந்து மீள்விக்கப்பட்டது