பக்கம்:தமிழ் மணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 தமிழ் மணம் நூற்றாண்டில் அநிருத்தரும் காஞ்சி மாநகரில் பௌத்தர்கள் தலைவர்களாகப் பல நூல்கள் இயற்றியமை பெளத்த நூல் கள் வழியே தெரியவருகிறது. காஞ்சியில் மட்டும் அன்றிப் பொதிகை, உறையூர். வஞ்சி, புத்ததத்த தேரரது பூதமங்கலம், சாக்கிய நாயனாரது சங்கமங்கை போதிமங்கை, மதுரை முதலியனவும் பௌத்தப் பெருநிலையங்களாக விளங்கின. நாகப்பட்டின வரலாறு பௌத்த மத வரலாற்றின் எதிர்ஒலி எனலாம். 1867 வரை அங்குப் புத்த விகாரை விளங்கியதாம். இங்கு நரசிங்கப் போத்தரையர் காலத்தில் சீன அரசன் கட்டிய சீனாக் கோயிலை மார்கொபோலோ குறித்துவைத்துள்ளார். இந்தச் சீனக் கோயில் உலகம் அறிந்த ஒன்று. 1477-இல் இதனைப் பர்மா அரசர் தமது கல்வெட்டில் குறிக்கின்றார்; 1725-இல் வாழ்ந்த வாலன்டைன் என்ற பெரியாரும் குறிக் கின்றார். திருமங்கை மன்னர் காலத்தில் இங்குப் புத்தரது பொற்சிலை ஒன்று இருந்ததென அறிகிறோம். இராசராச சோழரும். அவர் மகனார் இராஜேந்திர சோழரும் அவர்கள் காலத்தில் சுமத்திரா தீவில் அரசாண்ட ஸ்ரீவிஜய அரசர் களில் ஒருவருக்கு. நாகப்பட்டினத்தில் பௌத்தப் பள்ளி கட்ட உரிமை தந்தமையை லேடன் பட்டயத்தின் வழியே அறிகின்றோம். விகாரையை இடித்துக் கிறித்தவக் கோயில் கட்டியபோது பல புத்தச் சிலைகள் அங்குக் கிடைத்தனவாம். தமிழரது வாணிபத்தின் காவற் கடவுளாக மணிமேகலை விளங்குவதற்கேற்ப நாகப்பட்டினம் தமிழ்ப் புத்தப்பெரு வணிக நிலையமாகவும் பிறநாட்டுத் தொடர்பின் கலங்கரை விலக்கமாகவும் விளங்குகிறது. பௌத்த மதம் தமிழ்நாட்டில் மறைந்தபோதிலும் அக் கொள்கை தமிழொடு தமிழாய்ப் போய்விட்டது. புத்தர் திருமாலின் அவதாரமாகிவிடுகின்றார். சாத்தனார். ஐயனார், தர்மராசர், போதிராசர் என்று தமிழ்நாடு வழிபடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/66&oldid=1481440" இலிருந்து மீள்விக்கப்பட்டது