பக்கம்:தமிழ் மணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் பௌத்தம் 67 அரசமர உண்மையில் பழைய புத்தரையே எனலாம். வழிபாடும், சிங்கப்பெருமாள் கோயில் போன்ற இடங்களில் காணப்பெறும் திருவடிநிலை வழிபாடும் போதி மரத்தினையும் புத்தரது பாதபங்கயத்தினையும் நினைவூட்டாமல் இல்லை. திருவரங்கக் கோலத்தினைப் புத்தர் பெருமானது நிர்வாணக் கோலம் எனக் கூறுவோரும் உண்டு. தமிழ்நாட்டில் தோன் றிய அத்துவிதக் கொள்கையில் பௌத்த மதத்தின் மாற் றுருவத்தினை (பிரச்சன்ன பௌத்தம்) இராமாநுஜர் முத லானோர் காண்கின்றனர் என்பதனையும் மறத்தலாகாது. தமிழ்நாட்டுப் பலபல வழிபாட்டு முறைகளுக்கும் பௌத்த தந்திரங்கள் கூறும் முறைகளுக்கும் உள்ள ஒற்றுமையையும் மறைக்க முடியாது. பள்ளிகள், மடங்கள், கோயில்கள் இவை பௌத்தர்கள் வளர்த்த சமுதாய நிலையங்கள்; அறச் சாலைகள்: கல்லூரிகள். இவற்றை ஒட்டியே இந்த நாட்டுக் கோயில்கள் நாட்டின் உயிர்நிலையாக வளர்ந்து ஓங்கி யுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/67&oldid=1481441" இலிருந்து மீள்விக்கப்பட்டது