பக்கம்:தமிழ் மணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11. சங்க காலத்தில் சைவம்-1 சங்க நூல்களே இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் மிகமிகப் பழையவை, எட்டுத்தொகையும் பததுப்பாட்டுமே சங்ககால இலக்கியங்களில் நமக்குக் கிட்டியவை.தொல் காப்பியமோ. அவற்றிற்கும் முற்பட்ட இலக்கண நூல். இவற்றில் சைவத்தினைப்பற்றி என்ன குறிப்புக்களைக் காண லாம் என்று பார்ப்போம். தாய்மை வழிபாடு, சூலங்கொண்ட பசுபதியாகிய ஆண் டவன் தவக்கோலங் கொண்டு யோகநிலையில் இருந்ததன் வழிபாடு, ஆவின் வழிபாடு - இவை எல்லாம் 4000, 5000 ஆண்டுகளுக்கு முந்திய சிந்துநதிக்கரை நாகரிகத்தின் அடிப் படையாக விளங்கக் காண்கிறோம். வேதங்களில் ருத்ரசிவன் வழிபாடு, இலிங்க வழிபாடு. ஆதிரை நாளின் பழமை முதலி யன குறிக்கப்பெறுகின்றன. சிவம் என்ற பெயரே சிவப்பு. செம்மை என்ற தமிழ்ச் சொற்களோடு தொடர்புடையது என்பர். க்ரையர்சன் என்ற அறிஞர். கி.மு.மூன்றாம் நூற் றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரையில் சங்க காலத்தை ஏற்றியும் இறக்கியும் ஆராய்ச்சியாளர் அளந்து வருகின்றனர். இந்தக் காலத்தில் சிவ வழிபாடு வடநாட்டி லும் பரவி இருந்தது என்பதனை அங்கு வழங்கிய காசுகளில் பொறிக்கப்பெற்ற வடிவங்களும் நிலைநாட்டுகின்றன. தமிழ்நூலகளிற் பழையதாகிய தொல்காப்பியத்தில் சிவன் என்ற பெயர் இல்லை. சிவன் என்பது சிவப்பு. செம்மை என்ற சொற்களோடு தொடர்புடையதானால் சேயோன் என்ற சொல சிவத்தைக் குறிக்கும் எனலாம். முருகனும் செம்மைநிற முடையவனே. சேயோன் என்பதற் குத் திருமகன் என்று பொருள் கொண்டால், எவனுடைய திருமகன் என்ற கேள்வி எழும். அப்போதும் சிவன் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/68&oldid=1481442" இலிருந்து மீள்விக்கப்பட்டது