பக்கம்:தமிழ் மணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்க காலத்தில் சைவம்-1 கருத்து வெளிப்படலாம். 69 கந்தழி என்று தொல்காப்பியர் கூறுவது இலிங்கத்தினையே என்று விளக்குவாரும் உண்டு. ஆனால், இலிங்க வழிபாடு தமிழ்நாட்டிற் பழைய வழிபாடா என ஆராயவேண்டும். சங்க இலக்கியங்களிலும் சிவன் என்ற பெயர் காணக் கிடைக்கவில்லை. அருகர் முதலியோரும் தத்தம் வீட்டு நிலை யைச் சிவகதி என்று வழங்கியமையால் பொதுச்சொல்லாகப் போய்விட்டது போலும்! சிந்துநதிக்கரை நாகரிகம் பசுபதி யாக நிற்கும் யோக வடிவினை வழிபட்டதே பின்னாளில் தக்ஷிணாமூர்த்தி வடிவமாக வளர்ந்தோங்கியது. சங்க நூல் கள் ஆலமர் செல்வன், ஆலமர் கடவுள்.ஆல்கெழு கடவுள். தாழ்சடைப் பொலிந்த அருந்தவததோன் என்றெல்லாம் இந்த வடிவத்தினைப் புகழ்கின்றன. ஆவின் வழிபாடு சிவ னோடு இணைந்துவிட்டபோது அவனது தூய வெள்ளேற்றுக் கொடியாகவும். அவனேறும் ஊர்தியாகவும் அது சிறந்தது. அதனால் ஆனேற்றுக் கொடியோன்.ஏற்றூர்தியோன். புங்க வம் ஊர்வோன் எனச் சங்கப் புலவர் போற்றிவந்தனர். தாய் வழிபாடும் சிவனோ டிணைந்துவிடவே அம்மையப்ப னாகச் சிவபெருமான் விளங்கக் காணகிறோம். உமையம்மை ஒருபாகத் திருப்பாள்.நீலமேனி வாலிழை பாகத்தொருவன் அவன். அழிவுக்கடவுளாக விளங்கிய ருத்ரன் சர்வசம்ஹார மூர்த்தியாக அருளால் மக்களை உய்வித்து ஓய்வு தந்து இன் பம் பெருக்கி நம்மை வாழ்விக்கும் கடவுளாக இனித்துவரக் காண்கிறோம். "கொலைவன்" என்ற பெயரும் சங்ககாலத் தில் அவனுக்கு உண்டு. முக்கட் செல்வன், மூவெயில் எரித் தவன். கொடுகொட்டி பாண்டரங்கம் காபாலம் என்று சம் ஹார தாண்டவங்கள் ஆடுபவன் எனச் சங்க இலக்கியம் கூறும். மூவிலை வேலும், மழுவும், எரிதிகழ் கணிச்சியும் அவன் கையில் விளங்குவன. அவன் புலித்தோல் அணிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/69&oldid=1481443" இலிருந்து மீள்விக்கப்பட்டது