பக்கம்:தமிழ் மணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 தமிழ் மணம் தவன் என்பர். காட்டில் வளர் கொன்றையை அணிந்தவன் அவன். தலைமாலையாம் கண்ணியும் கொன்றை; இன்ப மாலையாக மார்பில் அணிவதும் கொன்றை; மாலையாக அணிவதும் கொன்றை. அடையாள சிவபெருமானின் கோலம் மாலைக் காலத்து வானை நினைப்பூட்டுவது என்பர் ஒருசிலர். செவ்வான்போன்ற மேனி, செவ்வானின் தலையில படர்ந்த செக்கச் சிவந்த மேகம் போன்ற சடை அங்கே தோன்றுகிற பிறைபோன்ற திங்கட் கணணி - இவ்வாறு தோன்றுகிறான் சிவன்: எல்லாம் மடிந் தொடுங்கப்போகும் இராககாலததின் முன்னே சூரியன் சிவந்து காகர என ஆடுவதனைச் சிவனாடலே என்கிறான் கம்பன். இனி, இமயமலையின் பனிக்கட்டிகள்மேல் கதிரவ னது ஒளிபாயச் செக்கச் சிவந்த நிலையே சிவனார் திருமேனி; நிழல் படிந்து கருத்திருக்கும் புறமே அம்மை; மேலே பட ரும் மேகங்கள் காலையில் சிவந்து தோன்றுவதே விரித்த செஞ்சடை; கங்கை, பலபல கோலங்கள் - இவ்வாறு எல் லாம சேரச் சிவபெருமான் திருக்கோலத்தைச் சிலர் இமய மலையில் காண்பதும் உண்டு. சங்ககாலப் பாக்களில் வரும் குறிப்புக்கள் கொண்டு, அந்திவானத்தின் ஆழ்ந்ததொரு கருத்தாகவும் காட்சியாக வும் சங்கப் புலவர்கள் சிவபெருமானைக் கண்டார்கள் எனலாம். "செவ்வானன்ன மேனி அவ்வான் இலங்கு பிறையன்ன இலங்குவால்வை எயிற்று எரியகைக்தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி' என்று வரும் அடிகள் இந்தக் கருத்தினை வற் புறுத்துவதுபோலத் தோன்றுகிறது நீர்சடைக் கரந் தான்' என்று கங்கையைத் தலையிலேற்றும் பெருமை யைக் குறிக்கும்பொழுது இமயமலைக் காட்சி தோன்றலாம். ஆதிரையான் என்ற பெயரைக் கூறினோம். ஆதிரை என்ற நட்சத்திரம் வேதகாலத்தில் சிறந்தது. ஆதிரை சிறந்திருந்த 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/70&oldid=1481444" இலிருந்து மீள்விக்கப்பட்டது