பக்கம்:தமிழ் மணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்க காலத்தில் சைவம்-1 குறிப்பைக்கொண்டு 71 பாலகங்காதர திலகர் வேதகாலம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்பர். சூரிய வீதி ஆதிரை முதல் தொடங்கிய காலம் அஃது என்பர். மேடசூரிய வீதி இன்று உத்திரட்டாதியை முத லாகக் கொண்டுள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அசுவினியை முதலாகக் கொண்டு வராக மிஹிரர் முத லானோர் அமைத்தபோது மேடம் முதலாக எண்ணினர். அதற்கு முன்னர்க் கார்த்திகை முதலாக எண்ணினார்களாம். பூமியின் போக்கில் ஏற்படும் மாறுதலால் இந்த மாற்றம் எழும். இஃது ஒரு நியதிக்கு உட்பட்டிருத்தலாம். இந்த மாற்றம் எழும் காலத்தைக் கணித்துப் பாலகங்காதர திலகர் வரையறை செய்துள்ளார். சங்ககாலப் புலவர்கள் ஆதிரை யைச் சிவனோடு ஒன்றுசேர்த்து ஆதிரையான் என்றொரு பெயரை அழகாக அவனுக்குச் சாத்தினர். ஆதிரை முதல்வனும் அவனே. ஆதிரையில் ஆடல் கண்டோ மன்றோ? சிவபெருமானைத் தவக்கோலததிற் காண்பதோடு அந்தணனாகவும் கண்டன வேத முதலியன. சங்க நூல்களும் பைங்கட் பார்ப்பான், அந்தணன், மறை யோன். மார்பில் நுண்ஞாண் கொண்டு விளங்குபவன் என் றெல்லாம் புகழத் தொடங்கின. உருத்திரனைக் காட்டில் திரிவோனாகக் கண்டது வேதம். சங்க நூல்களில் சிவபெருமான் காட்டில் வளரும் கொன் றையே சூடி விளங்குவதனைக் கூறினோம். காட்டில் ஆடும் ஆடலையும் காடமர்ந்தாடிய ஆடலன் எனச் சிவனோடு ஒன்று சேர்த்துப் புகழ்வதனையும் அங்குக் காண்கின்றோம். புராணக் கதைகளும் சங்க நூல்களில் காணபபெருாமல் இல்லை. திரிபுர தகனம் அவர்கள் மனத்திற்கு அடிக்கடி தோன்றுகிறது. மூவெயில் முருக்கிய செல்வன் என வணங்குகின்றனர் சங்கப் புலவர். இராவணன் கைலை மலையை எடுக்க முயன்று அழிந்த கதையும் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/71&oldid=1481445" இலிருந்து மீள்விக்கப்பட்டது