பக்கம்:தமிழ் மணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12. சங்க காலத்தில் சைவம்-2 சங்ககாலப் புலவர்கள் தத்துவ சாத்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் அல்லர்; வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட் டவர்களும் அல்லர்; சிவபெருமானின் பெயரையெல்லாம் திரட்டிக் கூறும் நிகண்டு ஆசிரியர்களும் அல்லர். ஆதலின். முன்னைய பேச்சில் சிவபெருமானுக்கு அவர்கள் வழங்கிய பெயர்களைத் திரட்டிக் கூறியது இவ்வாறு தவறான கருத்தை யும் எழுப்பி இருக்கலாம். சொற்கள் உயிரற்ற பாவைகள். அவை பேச்சில் வரும்போது உணர்ச்சியும். ஆற்றலும் பெற்று உயிரோடு இயங்குகின்றன. அந்த உயிர்ப்பினை அறியவேண்டும். அதிலும் பாட்டில் வரும்போது மந்திர சக்தி பெற்று நம்மையே மாற்றிக் கடவுளுணர்ச்சியில் ஆழ்த்திவிடுகின்றன. மனிதன் தன்னாற்றலுக்கு அடங்கியவற்றை அறி கிறான்: அடக்கி யாள்கிறான். வானத்தின் தொடுகரை போல அவனுக்கு எட்டாதவை வான்மீன்கள்போல எண் ணுக்கு அடங்காதவை: அளவிட முடியாதவை. வானம் போல எல்லாம் ஒன்றாய்க் கவிந்துநிற்பவை. மலைபோலக் கடல்போல மிகமிகப் பெரியவை. பெருந்துன்பம் சாவு முதலியபோலத் திடீர் என வந்து அவன் உள்ளத்தினைக் குழப்புபவை. இவற்றெதிரே அவன் அஞ்சி யவிந்து நிற்கின்றான். மலையிலும், அந்தி வானிலும், காட்டின் பேரிரு ளின் பெருங்காற்றின் கடுமுழக்க ஆடலிலும், ஈமப் பெருங் காட்டில் நிழலாட்டமாம் பேயாட்டத்திலும் தனக்கும் எட்டாத பேராற்றல் படைத்து அனைத்துமாய்த் திரண்ட பொருளின் உணர்ச்சி பெற்று வியந்து வியந்து அஞ்சி அஞ்சி மெல்ல நடக்கிறான். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத தொன்முறை மரபின் அந்தணன் அவன் என்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/74&oldid=1481448" இலிருந்து மீள்விக்கப்பட்டது