பக்கம்:தமிழ் மணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்க காலத்தில் சைவம்-2 75 தாக எல்லாவற்றையும் கடந்த கடவுள் என்ற கருத்துத் தோன்றுகிறது. கடவுள் என்ற சொல்லும் பிறக்கிறது. உலகிற் சிக்காது கடந்து உயர்ந்து தவவாழ்வு வாழ்வாரும் இக் கடவுளைத் தேடும் கடவுளர் என அவன் உள்ளத்தே தோன்றுகின்றன. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்வதே வழி என உணர்கின்றான். அப்போது அச்சம் சிறிது சிறிதாக நீங்குகிறது; பெரிய மலையிலும் அந்தி வானத்திலும் அழகு தோன்றுகிறது: அன்பு ஒளிர்கிறது; அழகு பாய்கிறது; கட்டுப்பட்ட அவன் உள்ளம் மலர்ந்து விரித்து, அவ்வள்பில் அழ்த்து ஒன்றுகின் றபோது பேரின்பம் பிறக்கிறது. பேரின்பத்தினைப் பாடலாகப் பாடுகிறான் பாவலன். இது அல்ல இது அல்ல என்று மட்டுமே இதற்கு முன் அப் பேராற்றலை விளக்க முடிந்தது. மாற்றம் மனம் கடந்து நின்ற மறையோன் இப்போது இன்பமாய் அன் பாய்ப் பாவலன் உள்ளத்தே புகுந்து இன்பக்கூத்தாடுகின் றான். அவனுடைய பாடலில் அதன் எதிர்ஒலியும் எதிர் ஒளியும் எழுகின்றன. காண முடியாததனைக் காட்டுகின்றான்; கேட்க முடியாததனைக் கேட்கச் செய்கின்றான்; தொட முடியா ததனைக் கட்டியணைக்கச்செய்கின்றான்; முகக்க முடியாததனை முகர்விக்கின்றான்; சுவைக்க முடியாததனைச் சுவைத் துணாந்து இன்புறச் செய்கிறான். எல்லாச் சுவையும், எல்லா மணமும், எல்லாக் காட்சி யும். எல்லாக் கேள்வியும், எல்லா உணர்ச்சியும், எல்லா இன்பமுகமாக இனிக்கின்ற நிலையில் நம்மையும் நிறுத்திவிடு கின்றான். இதுவே சங்ககாலப் புலவர்கள் செய்வது. அப் போது பூத்து நின்ற மரங்கள் எல்லாம் கடவுளராகக் காண் கின்றனர். பெண்களும். அந்தி வானத்திலும் இமயமலையி லும் சங்கப் புலவர் சிவக் காட்சி கண்டதனை முன்னரே கூறி னோம். அப் புலவர்பெருமக்கள் பாலையை நினைக்கும் பொழுது, திரிபுர தகனத்தில் முப்புரங்களும் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/75&oldid=1481449" இலிருந்து மீள்விக்கப்பட்டது