பக்கம்:தமிழ் மணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 தமிழ் மணம் நெருப்பாய்ப் பொடிப்பொடியாய் அழிந்ததே நினைவிற்கு வருகிறது. சிவபெருமான் சினக்கின்றான். ஆம்; அவனது சினந்த முகம் போன்றதுதான் வேனிற்காலத்தில் பாறை எல்லாம் கொதிக்கக் காய்கின்ற கதிரவன். பாறை எல்லாம் உடைகின்றன: முப்புரம் முரிந்து உதிர்ந்ததுபோல, மாயம் செய் அவுணர் கோட்டை எல்லாம் ஆகாயக்கோட்டையாய் மறைகின்றன. இத்தகைய பாலைவனம் கடந்து பொருள் தேடப்போகும் காதலனைப் பார்த்து இவ்வாறு தோழி வாயி லாகப் பேசும் காதலி என்ன கருதுகிறாள்? மிகமிகச் சூழ்ச்சி செய்து து மாயமோ எனும் வகையில் பொருளீட்டிப் பயன் என்ன? கேட்டீர் அல்லீரோ, மூவெயில் திரட்டிய பொருள் பொடிப்பொடியாய் எரிந்தொழிந்ததை! பொருளன்று பொருள். அன்பே பொருள்; எங்களைப் பிரியா அன்பே பொருள்! அன்பன்றோ. அருளன்றோ அந்த முப்புரம் எரித் தது? பிரமன் முதலானேராய் வருந்தியவர்கள் ஆண்டவ னிடம் முறையிட்டனர். அந்த அழுகையைத் தாங்க முடியாமல் அவன் மூவெயிலையும் எரித்தான். பொருளினும் ஆற்றல் மிக்கது அருள். ஆண்டவன் வடிவம் அது. அன்பே சிவ மென்பதன்றோ தமிழ்? ஆதலின், அந்த அன்புநெறியே -எம் மோடு இன்பமாய் இருப்பதே - அழியாப் பொருள் ஆகும் என்று முழங்குகிறது காதலியின் உள்ளம். பேராற்றற் பெருமானை நாம் வழிபடுவது இவ்வாறு அவன் அருளாகக் கு ை ழைவதா லேயே: நம் கூக்குரலைக் கேட்பதாலேயே. அவன் குற்றமே குணமாகக் கொள்கின் றான்: பாவங்களை எரிக்கின்றான்; இடர்களையே அமுதமென வாரி விழுங்கிக் களிக்கின்றான். சாவென அஞ்சுகிறோம்; நாம் வாழத் தான்சாவ முந்துவோன்போலச் சாவினை விழுங்கு கிறான். ஈதோர் உயர்ந்த கருத்து. அதியமான் சாவாப் பெருநிலை தரும் நெல்லிக்கனி பெறுகின்றான்; தான் உண்டு போரைப் பெருக்குவதினும் அவ்வை அதனை உண்டு கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/76&oldid=1481450" இலிருந்து மீள்விக்கப்பட்டது