________________
78 தமிழ் மணம் விரிவது ஒடுங்கும். பெண்ணுரு ஒருதிறனாகின்று. அவ் வுருத் தன்னுள்ளடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதும் சங்கப் பாடலே. ஒடுங்கிய நிலை சம்ஹாரக நிலை: எல்லாம் அழிந்த நிலை: எல்லாம் சுடுகாடாகிய நிலை. ஆடுகின்றான் அங்கே ஆண் டவன். அழிவு என்பதும் அருளே. மக்களுக்கு ஓய்வின்பம் தரும் செயலே இது. கொடிய காட்சியினை எல்லாம் அருட் காட்சியாகக் காட்டுவதிலே தமிழ்ப் புலவர்பெருமக்கள் சிறந் தவர்கள். கொடுகொட்டி என்பது அழிவுப் பெருங்கூத்து. பிரமன் தலையை அரிகிறான், அவன் இறுமாப்பினை அழிக்க. அது கொண்டு பிச்சை எடுக்கின்றான்; அன்புப் பிச்சை. தாருகாவனத்துப் பெண்கள் தூய உள்ளம் கொண்டு அவ னைக் கடவுளாகக் கண்டு அவன்பின் செல்கின்றனர். அவர் களுடைய கணவன்மார் இந்நாளைய விஞ்ஞானிகளின் சிறந்த அழிக்கும் கருவிகளைப் படைக்க வல்லவர்கள். அவனைக் கடவு ளாகக் காணும் கண் இன்றித் தம் மனைவியர் அவனுடலினைக் கண்டு மயங்கினர் எனக் கருதி அவன்மேல் தம் அழிவுக் கருவிகளை வீசி எறிகின்றனர். அவன் அவற்றை எல்லாம் அணியாகக் கொண்டு ஆடுகிறான். அவன் ஆட இவர்களும் ஆடி உண்மையை உணர்கின்றனர். காபாலக் கொடுங்கூத் தில் காத லருளை விளக்கும் ஆநந்த நடனத்தைக் காட்டிய பெருமை தமிழாது. இதன் வித்தினைச் சங்கப் பலகைகளில் காண்கிறோம். பின்னாளைய சிற்பங்களில் சிவபெருமானது அட்டவீரட்ட மும் கூத்துக்களாகவே அமைவதனைக் காண்கின்றோம். இதற்கும் அடிப்படையாக விளங்குவது சங்கப் பாக்களே. திரிபுர தகனம் செய்ததும் சிவபெருமான் சாம்பலில் ஆடச் சாம்பல் எல்லாம் அவன் வடிவில் படிந்துவிடும்படி பெருங் களிப்போடு ஆடுகின்றான். ஈதே பாண்டரங்கக் கூத்து. கொடுமை கொடுமை என நாம் அஞ்சிக் கண் மூடுஞ் செயல்