பக்கம்:தமிழ் மணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்க காலத்தில் சைவம்-2 79 கள் இவை. ஆனால், எல்லாம் அருளால் எழுந்தவை. நம் தாய் ஆட்டுவிக்கின்றாள் அவனை. அவள் தாளம் போட அவன் ஆடுகின்றான். அவள் முகத்திலும் கொடுமை இல்லை. அவள்மேல் பொங்கும் காதலாம் அருளே வெள்ளமிடுகிறது. கொடுமையில் அருளமுதைக் காட்டும் திறன் என்னே! பாண் டரங்கம் ஆடுகின்றான் அவன். அவனை அணைய விரும்பும் தோளுடையாள் அவனை எதிர்நின்று ஆட்டுகின்றாள் என்று கூறிக்கொடுங்கூத்தில் காதற் குறிப்பும் அருளாழமும் காட்டு கின்றார் நல்லந்துவனார். 'பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை அரிவை காப்ப ஆணமில் பொருள்எமக் கமர்ந்தனை ஆடி" என்பது காண்க. அவன் வடிவம் கூத்து மட்டுமா? அவனே ஆற்றி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்தான். அவனே இசையாழ் கெழுமணி மிடற் றந்தணன். ஆதலின், முத்தமிழாகக் காட்சி யளிக்கின்றான்.முத்தமிழ் வல்ல மூதறிஞர்க்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/79&oldid=1481453" இலிருந்து மீள்விக்கப்பட்டது