பக்கம்:தமிழ் மணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13. பல்லவர் சிற்பம் பல்லவர்கள் தமிழ்நாட்டை ஆண்டவர்கள். சேர சோழ பாண்டியர் என்ற மூவரசர்களில் இவர் ஒருவர் அல்லர். மூவரசர்களைப்பற்றியே பழைய இலக்கியங்களும் பின்வந்த இலக்கியங்களும் பேசுவதால், இவரைப்பற்றிய வரலாறு. ஏதோ தொண்டைமானைப்பற்றி வழங்கும் இரண்டொரு கதைகள் தவிர, வேறு வகையில் தெரியாமலே போயிற்று. சங்க காலத்திற்குப்பின் இவர்களே தமிழ்நாட்டினை உலகம் புகழச் செய்தவர்கள். மூவரசரை ஓட்டிய களப்பிரரை ஓட்டி யவர்கள் இவர்களே. வடநாட்டில் பெரும்புகழ் பெற்று ஹர்ஷ சக்கரவர்த்தியைத் தோற்கடித்த புலிகேசியைத் தோற்கடித்த பெருமை பல்லவர்களில் சிறந்த நரசிங்கவர்ம னைச் சாரும். இவனே மாமல்லன். இவன் கண்ட துறை முகப்பட்டினமே மாமல்லபுரம். இதுவே இப்போது மாவலி புரம் என வழங்குகின்றது. மாவலிபுரத்துச் சிற்பங்கள் பல்லவர் பெருமையை, உலகில் எங்கிருந்து வருபவர்களுக் கும் தன் ஈடும் எடுப்பும் இல்லாப் பெருமையையும் பல்லவர் வரலாற்றையும் கூறிக்கொண்டே ஒளிர்கின்றன: கல்லும் சொல்லாதோ கதை' என்று நம்மை வியக்கச் செய்கின்றன. சிற்பங்களே பல்லவர் வரலாற்றைக் கூறுகின்றன. இந்தச் சிற்பங்களில் கல்வெட்டுக்கள் உண்டு. அவற்றின் வழியே- தான் தமிழ்நாட்டு வரலாறு நமக்கு வெளியாகின்றது. று தமிழ்ச் சிற்பமே சிற்ப நூல்களில் திராவிடச் சிற்பம் என வழங்கப்பெறுகிறது. இன்று தமிழ்ச் சிற்பத்தின் மிக மிகப் பழைய நிலைமை பல்லவச் சிற்பங்களாகவே காட்சியளிக்கின் றன. அவற்றிற்குமுன் தமிழ்நாட்டில் சிற்பங்கள் இல்லையா? இருந்தன. ஞானசம்பந்தர், தம் காலத்திலிருந்த கோபுரங் கள், சுதை வேலையில் செய்த மதில்கள், மாடங்கள் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/80&oldid=1481454" இலிருந்து மீள்விக்கப்பட்டது