பக்கம்:தமிழ் மணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. பல்லவர் சிற்பம் 81 வற்றைப்பற்றிப் பாடுகிறார். திருநாவுக்கரசர் மணிக்கோயில், மாடக்கோயில், கற்கோயில் என்று பலவகையான கோயில் களைக் குறிக்கின்றார். ஆனால், அப் பழங்கோயில்கள் மண்ணா லும் மரத்தாலும் ஆனவை: ஆதலின், அவை அழிந்தொழிந் தன. மண்ணாலாகிய தளி, மண்டளி. பரவையுள் மண்டளி என்பது சுந்தரர் பாடிய கோயிலன்றோ? பின்னே வந் தவையே கற்றளிகள். கற்றளிகளையே எங்கும் காண்கிறோம். மணிமேகலை, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் முதலிய நூல் களில் இந்தச் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மாடங்களை வெண் சுதை தீட்டிப் பலபல பாவைகளோடும் ஓவியங்களோடும் மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் ஒரு திறஞ் சாரா அரைநாள் அமையத்து நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎம் கொண்டு தெய்வ நோக்கிப் பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனையாக வகுத்தமையையும் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம் அமைத்ததனையும் கூறக் கேட்கிறோம். அகத்தியர் செய்ததாக வழங்கும் சகளாதிகாரம் என்ற சிற்ப நூல் மண்ணிலும் மரத்திலும் சிற்பம் அமைக்கும் முறையைக் கூறுகின்றது. ஆனால், இன்றுள்ள கோயில்கள் எல்லாம் கற்கோயில் களே. இந்தப் புரட்சியைச் செய்தவன் மாமல்லனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மன். ஏழாம் நூற்றாண்டு தொடங் கியதும் இந்தப் புரட்சி தொடங்கியது எனலாம். இந்தப் புரட்சி செய்ததன் காரணமாக, இவன், தன்னை விசித்திர சித்தன் எனப் புகழ்ந்துகொள்கிறான்; செங்கல், மரம், சுதை, உலோகம் என்பவையே இன்றி. முக்மூர்த்திகளுக்குக் கோயில் கட்டியதாகத் தன் பெருமையைத் தானே தன் கல்வெட்டில் நம் காதெல்லாம் குளிரக் கருத்தெல்லாம் குளிர எடுத்துப் பேசுகின்றான்; அவனுக்கு முன்னே இருந்த கோயில்கள். களப்பிரக் குழப்பத்தில் கண்காவ லின்றி அழிந்து கிடப்பதனைக் கண்டான்போலும்! கற்கோயிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/81&oldid=1481455" இலிருந்து மீள்விக்கப்பட்டது