பக்கம்:தமிழ் மணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 . தமிழ் மணம் சிதைந்து கிடப்பதனை நாம் இன்று காணவில்லையா? கண்ட மனம் நொந்தது அவனுக்கு. நமக்குத்தான் அந்த நோவு இல்லையே! அவனுடைய விசித்திரசித்தம் கல்லில் கோயில் அமைக்க முந்தியது. புத்தர்களும் சைனர்களும் குகைகளைக் கண்டெடுத்து, அவற்றைச் சீர்ப்படுத்தி, அங்குள்ள பாறை களை வழவழ எனச் செதுக்கிவிட்டுப் படுக்கைகள்போல் அமைத்து, மழை உள்ளே வழியாதபடி மேற்பாறையில் கீறி விட்டு உள்ளே சென்று படுத்துறங்கி வாழ்ந்துவந்தனர்; வழி படும் வடிவங்களையும் கல்லிற் செதுக்கிவந்தார்கள்: இவ் வாறு உதவியவர் பெயரைக் கல்வெட்டில் எழுதியும் வந்தார் கள். இந்தக் குகைகளையே முன்மண்டபத்தோடு கோயிலாக ஏன் அமைத்தலாகாது என்று மகேந்திரவர்மன் மனத்தில் தோன்றியது. உள் குகையில் மூன்று வாயில்கள் உள்ள கருப்பக்கிருகம் - அதற்கு முன்னாகக் குகைவாயிலைத் தூக்குவ தாக வரிசையில் அமைந்த நான்கு தூண்கள்- இப்படி அமைந்ததே அவன் கண்ட புதுவகைச் சிற்பமான குகைக் கோயில். நான்கு தூண்கள் முன்னே தோன்ற, நடுவே இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் முப்பகுதியாக இருக்கும். மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் நாற்சதுரமாக விளங்கும்; இடைப்பகுதி எட்டுப் பட்டையாக விளங்கும். தூண், மேலே போதிகையாக விளங்குவது: தூண்களின் வரிசை வாட்டத் தில் வலமும் இடமுமாகத் தோரணவாயில் மேல்நோக்கிச் சென்று தோன்றும். மழை வெளியே வழிந்து ஓட, மேற் பாறையின் முகப்பு முன்வளைந்த எழுதகமாகக் குழைக்கப் பெற்றது. இவற்றினிடையே வளைந்து விளங்கும் கூடுகள் தோன்றும். அக் கூடுகளாம் பள்ளங்களில் மனித முகம் செதுக்கப்பட்டிருக்கும். கருப்பக்கிருகத்தின் இருபுறமும் வாயில்காப்பாரான துவாரபாலகர் நிற்பர். திருச்சிராப் பள்ளி, மகேந்திரவாடி, சீயமங்கலம், பல்லாவரம், வல்லம் முதலிய இடங்களில் இவன் எழுப்பிய கோயில்களைக் காண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/82&oldid=1481456" இலிருந்து மீள்விக்கப்பட்டது