பக்கம்:தமிழ் மணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

லாம். [பல்லவர் சிற்பம் 83 இக் கோயில்களில் பல நிறங்களிற் பூசிய அழகிய ஓவியங்களும் சிற்றன்னவாசலில் காணக் கிடக்கின்றன. அங்கே, தூணில் உள்ள ஓவியம் மனைவியரோடு கூடிய இவ னுடைய ஓவியம் என்று கருதுகின்றார்கள். இவனுடைய வடி வம் மாவலிபுரத்துப் பூவராகக் கோயிலில் செதுக்கப்பெற் றிருக்கக் காணலாம். இவன், அப்பர்சுவாமிகளின் மாணவ னாக வந்து சைவனானமையைத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட் டில் கூறுகிறான். இந்தச் சீர்திருத்தத்தின் பயனாகச் சைவம் கோயில் களால் வாழும் பெரும்பேறு பெற்றது. சைவம் இவனது கலையோடு கலையாக நிலைபெற்றது. இவன் ஓவியக் கலை ஞன்; தக்ஷிண சித்திரம் என்ற நூலை எழுதியவன்; குடுமி யான்மலைக் கல்வெட்டில் கண்ட புதிய இசைமுறையை வகுத்த இசைக் கலைஞன். எனவே, இவன் கண்ட கோயில் களும் இக் கலைகளின் நிலையமாக ஓங்கின. இவனுடைய மகனே நரசிங்கவர்மன். நரசிங்கவர்மனின் படைத்தலைவரே சிறுத்தொண்ட நாயனார். படைத்தலைவ ராய் இருந்தபோது பரஞ்சோதி என்பது இவருக்குப் பெயர். தமிழ்நாட்டின்மீது படைஎடுத்து அல்லல் விளைத்த புலி கேசியை, அவன் நகரமாம் வாதாபியிலேயே சென்று வென்று, வெற்றிக்கொடியை நாட்டி, அந்த நகரத்தினைத் தவிடுபொடியாக்கிய இப் பெருவீரனாம் அரசனது பெயர் வாதாபி நகரிலேயே கல்லில் பொறிக்கப்பெற்றுள்ளது. ஈழ நாட்டு அரசனான மானவர்மன். தன் நாட்டினை இழந்து இவ னிடம் சரணடைந்து, இந்த வாதாபிப் போரிலும் இவனுக் காகப் போரிட்டான். பின்னர், மானவர்மனுக்குத் துணையாக இரண்டுமுறை தன் படைகளைக் கப்பலில் மாமல்லபுரத்துத் துறைமுகத்திலிருந்து ஏற்றி அனுப்பி, அவனை ஈழத்தின் அரசனாக்கினான், நரசிம்மன். இவன், சிற்பமுறையில் மேலொருபடி சென்றான். குகைக்கோயில்கள் குகையாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/83&oldid=1481457" இலிருந்து மீள்விக்கப்பட்டது