பக்கம்:தமிழ் மணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 தமிழ் மணம் தானே தோன்றுகின்றன? இவன், அவை கோயிலாகவே முழுதும் தோன்றவேண்டும் எனக் கருதினான். ஒருகல் கோயில்கள், மாமல்லபுரத்தில் இருப்பனவற்றைப் பஞ்ச பாண்டவர் தேர் என்பர் பொதுமக்கள். அந்த நாளில் வழங் கிய மண்தளிகள் அமைந்தவகையில் எல்லாம், கற்றளிகளை அமைக்க முடியும் எனக் காட்டுவதுபோலத் தேர்க்கோயில் கள் அங்கே நம்மை நோக்கி நிற்கினறன. ஒரே கல்லில் குடையப்பெற்ற கோயிலே தேர்க்கோயில். அங்கே உள்ள மண்டபங்களில் நரசிங்கவர்மன் பெயரை நினைப்பூட்டும் தூண் கள். குந்தியிருக்கும் சிங்கங்கள்மேல் தோன்றுகின்றன. எட்டுப் பட்டை தீற்றிய தூண்கள் இவை. தலைப்பகுதி திரண்டிருக்கும். தலையின்மேல் கற்பலகை விளங்கும். கண்ணன் பால் கறக்கும் காட்சி, மகிஷாசுரமர்த்தனம் முதலி யவை கண்கொள்ளாக் காட்சிகள். கல்லும் கவிபாடி நடனம் செய்யக் காண்கிறோம். இசைக்கலையொடு நாடகக்கலையும் கோயிற்கலையில் புகுந்தமையை இங்குக் காண்கிறோம். இவனுக்குப்பின், புலிகேசி பரம்பரையின் தொந்தரவு மிகுதியாயிற்று. ஐயடிகள் காடவர்கோன் துறவு பூண்டு சிவனடியாராய்ச் சிவன் கோயில்களைச் சுற்றிப் பார்த்துப் பாடல் பாடினார். பின்னே வந்த இராசசிம்மன். பகைவர்கள் புரத்தினைத் திரிபுரதகனம் செய்த சிவபெருமான்போல் அழித்தான் எனப் புகழப்பெறுகின்றான். ஒற்றைக்கல்லைக் குடைந்து கோயில் வடிவில் அமைத்தால் போதுமா? ஒவ் வோர் ஊரிலும் ஒவ்வொரு கோயில் இருக்கவேண்டும் என்ப தன்றோ நாவுக்கரசர் கொள்கை? சிறுசிறு கற்பாறைகளைக் கொண்டுவந்து அடுக்கிக் கோயில் கட்ட இவன் முன்வந்தான். இராசசிம்மன் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலை முதலிலே இந்தவகையில் கட்டினான். முகமண்டபம், அர்த்த மண்டபம். சுற்றுப்புறம்- இவை எல்லாம் கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. இலிங்கத்தின் உள்ளே சோமாஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/84&oldid=1481458" இலிருந்து மீள்விக்கப்பட்டது