பக்கம்:தமிழ் மணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பல்லவர் சிற்பம் 85 கந்த வடிவம். சுவரில் பலவகைச் சிற்பமாக விளங்குகிறது. கைலாயநாதர் கோயில் இந்த வகையில் தலைசிறந்தது. அதன் விமான அமைப்புச் சுற்றாலைக் கோயில்கள். பலவகைச் சித்தி ரங்கள் இவற்றால் இன்றும் எல்லார் கருத்தையும் கவருவது. பின்வந்த நந்திவர்மன் அமைத்த மண்டபம் முதலியவை இந்த முறையையே பின்பற்றின. இவையே எட்டாம் நூற்றாண டைய சிற்பமுறையாக விளங்கின. இதனினும் மாறிய அமைப்புக்கள் ஏறக்குறைய பிற் காலக் கோயில்கள்போல அமைந்தவை அபராஜித பல்லவன் காலத்தவை ஆகும். ஒன்பதாம் நூற்றாணடின் சிற்பமுறை இதுவே எனலாம். திருத்தணிகை வீரட்டானேச்சுரர் கோயில் இந்த முறையில் அமைந்தது. ஆனால், விமானம் கஜபிருஷ்ட விமானம் என்ற தூங்கானை மாடமாகும். இந்தச் சிற்பமுறையைப் பிறித்தறிவதற்கு ஓர் எளிய வழி உண்டு. இங்கு இருக்கும் துவாரபாலகர்க்கு, முன் இருந்த இரண்டு கைகள்போல் இல்லாமல், நான்கு கைகள் இருக்கக் காண போம். சோழ அரசினைப் புதுப்பித்துப் புத்துயிரளித்த விஜயாலயன் தன் விஜயாலயசோளீச்சுரத்தினை இந்த முறையிலேயே அமைத்துள்ளான். ஆதலின், சோழச் சிற்ப முறை இவ்வாறு பல்லவர் சிற்பத்தின் தொடர்ச்சியே ஆகும். பல்லவர் சிற்பமே தமிழ்ச் சிற்பமான திராவிடச் சிற்பத்தின் அடிப்படை. அதுவே கோயில்களை வளர்த்துச் சமுதாயத் தின் உயிர்நிலையாய் ஓங்கி வளர்ந்ததனைச் சோழர் காலத் தில் காண்கிறோம். இதற்கு வழிவகுத்தது பல்லவச் சிற்பம். கற்றளிப் பிச்சன் என்ற அதிகாரி ஏற்பட்டதொன்றே இச் சிற்பத்தின் பெருமையைக் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/85&oldid=1481459" இலிருந்து மீள்விக்கப்பட்டது