பக்கம்:தமிழ் மணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14. சோழர் காலத்துச் சமுதாயப் பணிகள் கோயில்கள் மிகமிகப் பெரியனவாய் ஊரினர் அனைவ ரும் வந்து தங்கக்கூடிய வகையில் பல பல மண்டபங்க ளோடு தோன்றின; பல கலைகளுக்கும் இருப்பிடமாயின. மக்கள் தம் கலை வாழும் இடமாக இந்தக் கடவுள் நிலையங்கள் தோன்றியமை அருமைப்பாடேயாம். இராசராசன் தஞ்சா வூரில் திருநாவுக்கரையர் பாடிய தஞ்சைக் குல மாமணிக்கு அருகே பெரியதொரு கோயில் கட்டினான். பெரிய இலிங் கம்! பெரிய நந்தி! பெரிய விமானம்? அவன் அன்புள்ளம் போல எல்லாம் பெரியன! விமானம் 216 அடி உயரம். அதன் சிகரத்திலுள்ள கற்குமிழ் ஒரே கல்: 80 டன் எடை உள்ளது. கோயில் 750 அடி நீளம், 250 அடி அகலம். பெரிய கோட்டைபோலக் கோயிலைக் கட்டினான் இராசராசன்; தேவாரம் பாடுவோர், இசைக்கருவி வாசிப்போர், நடனம் ஆடுவோர் - எல்லாரையும் அங்கே குடியேற்றினான். சுந்தரர் பாடியது போன்ற தக்ஷிணாமூர்த்தி வடிவம். சுந்தரர் பாடிய ஆடவல்லான் என்ற பெயர்கொண்ட நடராசர் வடிவம் என்று இப்படிப் பல வடிவங்களை உலோகங்களில் அமைத் தான் இவன்; தான் வென்ற ஈழநாட்டு ஊர்களின் வருவாயை யும் இக்கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுத்தான். -எ இவனுடைய மகன். இதனினும் அழகிற் சிறந்த கங்கை கொண்ட சோழபுரத்தைப் பெருங்கோயிலாகக் கட்டினான். நடனமாதர் வடிவம், சண்டேசர் அருள் பெறுங் காட்சி - இவை மிக அழகாக அங்கே அமைந்துள்ளன. இரண்டாம் இராசராசன் கட்டிய இராசராசேசசுரமே இன்று தாராசுரம் என்று வழங்குகிறது. இதுவும் ஒரு கற்சிற்பப் பெருவிளக் கம். மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய திரிபுவனமும் இத் தகையதே. சோழநாட்டில் காவிரிக்கரையோரம் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/86&oldid=1481460" இலிருந்து மீள்விக்கப்பட்டது