பக்கம்:தமிழ் மணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 தமிழ் மணம் பாடு போலும்! அவரை, ஆண்டவன் தடுத்தாண்ட வரலாறு, அக் கீழ்ப்படையில் ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கக் காண் கிறோம். கடவுட் காட்சிகளில் மட்டுமன்றி, உலகியற் காட்சி களிலும் ஓவியரது மனம் ஈடுபட்டதனையும் காண்கிறோம். ஏழைமக்களின் காதற்குடிசை வாழ்வும். அங்கு ஒரு புதுமைக் கலையாகத் தோன்றக் காண்கிறோம். சோழர்கால ஓவியம் இவ்வாறு அங்குக் கிடைப்பது நமது நல்ல காலமேயாம். பல்லவர் காலத்தில் தோன்றிய ஓவியம் இவ்வாறு வளர்ந் தது. நாடகக் கலையும் அங்கு வளர்ந்தது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் இராசராச நாடகம் நடைபெற்று வந்தது என்பதைக் கல்வெட்டுக்களிலிருந்தும் அறிகிறோம். இராசராசன் புகழ் இவ்வாறு நாடகமாகவும் பரவியது. சோழர்கள் தங்கள் அரண்மனைகளை இவ்வளவு நிலையானவை யாகக் கட்டிக்கொள்ள வில்லை. 'பொன்மாளிகை' என்றும், ஆயிரத்தளிகள்' என்றும் அவர்கள் அரண்மனைகள் பேர். பெற்றாலும், அவை செங்கல்லாற் கட்டப்பெற்றவைகளே. ஆதலின், அவை எல்லாம் அழிந்தொழிந்தன. சமுதாய நிலையமான கோயில்கள் கடவுள் பெயரால் நிலவவேண்டு மென்று அந்த அரசர்கள் கல்லினால் கட்டினார்கள். 'குடிகளே நாட்டின் உயிர்நிலை' என்று கம்பர் பாடியது இந்தச் சோழர் கால உண்மையை உணர்த்தலே ஆகும். இந்தக் கோயில்களைக் கண்காணிக்கின்ற சபையினராம் பன்மாகேசுரர், கோயிலில் கூடுவது வழக்கம். சபையினர், பலரும் கொடுக்குங் கொடைகளை வாங்கிக் கோயிலுக்கு வேண்டும் பல தொண்டுகளையும் நடத்தி வந்தனர்.தூங்கா விளக்கு எரிப்பதற்கு நெய்க்காகப் பலர் ஆடுகளைத் தந் தனர். சோழ அரசரே அன்றி. அரச குடும்பத்தினர் பலரும் பலபல நன்கொடைகளை வழங்கினர்; படைவீரரும் வழங் கினர்: கோயில்களைக் கட்டினர். பஞ்ச காலத்தில். கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/88&oldid=1481462" இலிருந்து மீள்விக்கப்பட்டது