பக்கம்:தமிழ் மணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழர் காலத்துச் சமுதாயப் பணிகள் 89 பணத்திலிருந்து மக்களுக்குக் கடன் கொடுப்பதும் உண்டு. பஞ்சம் போக்கும் வழி இஃது. அரசர்களது ஆணையோலை களைக் கல்லில் வெட்டிவைத்தனர். இன்று ஆவணக் களரி களில் (Offices of Registration) பத்திரங்களைப் பதிவு செய் வதுபோலக் கோயில் சுவர்களில் கல்வெட்டாக வெட்டிவைத் தார்கள். அந்த நாளையில் கற்றளிப் பிச்சர் என்ற அதிகாரி கோயிலில் இருந்தார். இந்த ஆணைகள் சரிவர எழுது வதனைச் சரிபார்க்கத் திருமந்திர நாயகர், திருவாய்க் கேள்வி யார் என்ற பல திறத்தினர் அரசாங்கத்தில் அமர்ந்திருந் தனர். ஒவ்வோர் ஊரிலும் ஊர்ச்சபைகள் ஊர்க்காரியங்களைத் திறமையுடன் மேற்பார்த்து வந்தன. தல சுய ஆட்சி (Self- Government) அன்று அப்படிச் சிறந்திருந்தது. ஊரில். வயது வந்தவர்களில. கற்றவர்கள் பெயரை எல்லாம் பனை ஒலை நறுக்கில் தனித்தனி எழுதிக் குடத்தில் இடுவார்கள். இளஞ்சிறுவன் ஒருவன் எல்லோருக்கும் தெரிந்தாற் போல ஒரு நறுக்கினை எடுத்துத் தருவான். எல்லாரும் காணும் படியாக உள்ளங்கையை விரித்து வைத்துக்கொண்டு அந்த நறுக்கினைக் கையில் ஏற்கவேண்டும். ஏற்றவர்கள். அந்த நறுக்கில் எழுதியுள்ள பெயருள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக அறிவிப்பார்கள். ஊர் ஒவ்வொன்றும் பல குடும்பமாகப் பிரிக்கப்படும்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொருவர் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஊர்ப் பெருமக்களாகச் சபை கூடுவர். இவர்கள் சிறு சிறு குழுவாகப் பிரிந்து. ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு வேலையை மேற்பார்த்து வந்தனர். இன்றைய நகராண்மைக் கழகங்களில் நிலையான குழுக்கள் (Standing Committee) இருப்பதை யொக்கும் இஃது.இக் குழுக்களுக்கு வாரியங்கள்' என்பது பெயர்: பஞ்சாயதது என்று இன்றும் வழங்குகிறோம். குழு ஒவ்வொன்றிலும் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/89&oldid=1481463" இலிருந்து மீள்விக்கப்பட்டது