பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை, வேப்பேரி, ஆனந்தாஸ்ரம புரீலயூரீ வீர சுப்பைய்ய சுவாமிகள் மடாலய மடாதிபதி நீலழரீ வித்தியானந்தகிரி சுவாமிகள்

திருமந்திரம் என்பது நிறைமொழி மாந்தர் ஆணையில் கிள்ந்த மறைமொழி ஆகும். அஃது இலை மறை காய் போன்று, அரிதில் காணும் அரும் பொருளைத் தன்னகத்தே கொண்ட சக்தி வாய்ந்தது. இதனைத் தமிழ் மொழியில் திருமூலர் என்னும் அரும்பெரும் தவயோகப் பெரியார் ஆண்டுக்கு ஒவ்வொரு மந்திரமாக தமது அருந்தவயோகக் காட்சியில் கண்ட உண்மையை மூவாயிரம் மந்திரங்களாகப் பாடியுள்ளார் என்பது தெய்வப்புலவர் சேக்கிழார்பெருமான், உமாபதி சிவாச்சாரியார் போன்ருேர்களின் கருத்தாகும். இம்மந்திரம் ஒன்பது தந்திரங்களைக் கொண்டது. வடமொழி யிலும் தேவியைப் பற்றிக் கூறும் தந்திர நூல்கள் பல உண்டு. அவைகட்குத் தந்திர சாஸ்கிரங்கள் என்பது பெயர். இத் திருமந்திர நூலிலும் தேவியைப் பற்றியும், இறைவனும் சிவபெருமானைப் பற்றியும், பரீ சக்கரம், திரு அம்பலச்சக்கரம் முதலான பல சக்கரங்களைப் பற்றிய அரிய செய்திகளும் காணக் கிடக்கின்றன. வடமொழியில் உள்ள மந்திர மஹோத்தி முதலான மந்திரநூல்கள் போன்று, தமிழில் இத் திருமந்திரம் நற்றமிழ் யாப்பால் நன்முறையில் யாக்கப் பட்டுள்ளது. இத் திருமந்திரத்திற்குத் தமிழ் மந்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பது சாலப் பொருத்தமானது.

இத் தமிழ் மந்திரத்திற்குக் கற்ருேர் போற்றும் அரும் பெரும்புலவர் பேராசிரியர் வித்துவான் பாலூர் கண்ணப்ப முதவியார் அவர்கள் தாம் தேர்ந்தெடுத்த 365 மந்திரங் களுக்குத் தெளிபொருள், அருஞ்சொல் உரை, விளக்கம் எழுதிப் பண்டிதர் முதல் பாமரர் யாவரும் உள்ளங்களைக் கவரும் வகையில் உலகிற்கு அளித்திருப்பது மிக மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/11&oldid=571188" இலிருந்து மீள்விக்கப்பட்டது