பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114

(அ- சொ) இணங்கி சேர்ந்து. பிணங்கி - வேறுபட்டு. உணங்கி - மறைந்து. அமராபதி - தேவேந்திரன். நாதன் . தலைவன். .

(விளக்கம்) தன் அருள் பெற்றவர்க்குத் தோற்றம் அளிப்பவனாகவும், அருள் பெருதவர்க்கு மறைபொருளாகவும் இருப்பவன் ஈசன் என்பது கருத்து.

ஈசனைப் போற்றில்ை அருள் பெறலாம் 11. அப்பனை கந்தியை ஆரா அமுதினை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வன எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினுல் அப்பரி சீசன் அருள்பெற லாமே. (இ -ஸ்) அப்பனும், நந்தியும், தெவிட்டா அமுத மும், ஒப்பற்ற வள்ளலும், ஊழிக்காலத்திலும் விளங்கும் முதல்வனும் ஆகிய அவனே, எவ்வாறேனும் போற்ற வேண்டும். போற்றில்ை, அந்த வகையால் அவ்விறைவன் திருவருளேப் பெறலாம்.

(அ- சொ.) ஆரா - பருகத் தெவிட்டாத, ஏத்துமின் . போற்றுமின். பரிசு - வகை. - (விளக்கம்) தன்னைப் போற்றுபவர்க்கு அருளும் தயாநிதி ஆதலின் அவன் வள்ளல் எனப்பட்டான். எல்லாமும் யாவரும் அழிவர்; இவன் அழியாது இருத்தலால் ஊழி முதல்வன் எனப்பட்டான். . - வாழ்த்துவோர் உள்ளத்து ஈசன் அமர்ந்து அருளுவன் 12. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியை தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும் ஆத்தம்செய் தீசன் அருள் பெற லாமே. - (இ - ள்) வாழ்த்த வல்லார் மனத்தினுள் பொருந்திய ஒளி வடிவினன்; தூய வடிவினன்; துரிய மனத்தார்