பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124

அறிவுப் பாடல்களால் இறைவனை வழிபட்டு, நான் நல்ல அரசமரத்தின் கீழ் இருந்தேன்.

(அ-சொ) ஞானத்தலைவி - பார்வதி. நந்தி - சிவபெரு மான். நகர் - திருவாவடுதுறைக் கோவில். ஊனம் - குற்றம். ஞானப்பால் - அறிவுப் பாடல்கள். ஆட்டி - குளிப்பாட்டி.

(விளக்கம்) இறைவன் நந்தி எனப்படுவன். நந்தி கேஸ்வரரும் நந்தி எனப்படுவர். இந்தக் கருத்துப் பலவாக இந்நூலில் பயிலப்பட்டு வரும். இறைவனுக்குரிய அபிடேகப் பொருள்களுள் பாடல்களே தலைசிறந்தவை. இறைவன் தமை உணர்ந்தோர் பாடலில் பட்சமுடையவன். போதி - அசோக மரம்; இதுவே சிவபோதி எனப்படும்.

யான் பெற்ற இன்பம் உலகமும் பெற வேண்டும் 26. யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. (இ - ள்) இறைவன் திருவருளால் யான் இறைவனது இன்பத்தைப் பெற்றனன். இவ்வின்பத்தினை இந்த மண்ணு லகமும் பெற வேண்டும். பெருமையினைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் உண்மைப்பொருள் இன்னது என எடுத்துக் கூறினல், அதுவே, நாவாகிய தசையினைப் பற்றி நின்ற உணர்ச்சி தரும் மந்திரமாகும். இந்த மந்திரத்தைப் பற்றப் பற்ற இறைவன் திருவடி ஞானம் கிடைக்கப் பெறும்.

(அ-சொ) வையகம் - உலகம். வான் - பெருமை, மறை - வேதம். ஊன் தசை (ஈண்டு நா). தலைப்படும் - வந்து சேரும் (விளக்கம்) பெரியோர்கள் தாம் அடைந்த இன்பத்தைப் பிறரும் அடையுமாறு செய்யும் இயல்பினர். ஆகவே, இவ்