பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

128

சிவனடியார் உண்ட சேடத்தின் மாண்பு

31. வித்தகம் ஆகிய வேடத்தார் உண்டஊண்

அத்தன் அயன்மால் அருந்திய அன்னமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே

(இ-ஸ்) ஞானமயமான திருவேடமுடைய சிவனடி பார்கள் உண்ட உணவு, இறைவன், பிரமன், திருமால் அருந்திய அன்னம் போன்றது. சிவபெருமானே முழுமுதற் பரம்பொருள் என்று தெளிந்த அச்சிவனடியார்கள் உண்ட உணவின் மிச்சத்தை உண்டால் மோட்சம் அடைதல் உண்மை என நம் குருநாதன் கூறியுள்ளார்.

(அ- சொ வித்தகம் - பேரறிவு.ஊண் - உணவு. அத்தன் தந்தையாம் சிவபெருமான். அயன் - பிரமன். மால் - விஷ்ணு. சித்தம் - மனம், சேடம் - உண்ட மிச்சம். முத்தி - மோட்சம். மூலன் - மூலப்பொருளான சிவனும் குருநாதன்.

(விளக்கம்) இப்பாடல் அடியார்கட்கு அன்னமிடும்

மாண்பை அறிவிக்கிறது. சிவனடியார்கள் சிவனே முழுமுதற்

பரம் என்று அறியும் திறத்தர் ஆதலின், வித்தகமாகிய வேடத்தர், சித்தம் தெளிந்தவர் எனக் குறிப்பிட்டனர்.

சிவபெருமான் அன்றி வேறு தெய்வம் இல்லே

32. வானவர் என்றும் மனிதர் இவர்என்றும்

தேனமர் கொன்றைச் சிவன்அருள் அல்லது தானமர்க் தோரும் தனித்தெய்வம் மற்றில்லை ஊனமர்க் தோரை உணர்வது தானே.

(இ-ஸ்) இவர்கள் தேவர்கள் என்றும், இவர்கள் மனிதர்கள் என்றும் கூறப்படும் வேற்றுமைகள் எல்லாம்