பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127

மாதாவாகிய தலைவியாம் சித்சத்தியின் திருவருள் பேற்றைக் கைவரப் பெற்றவர் ஆவார்.

(அ-சொ) தமிழ் - தமிழால் ஆன திரு மந்திரம், ஞாலம் - உலகம். நண்ணுவர் - நெருங்கப் பெறுவர்.

(விளக்கம்) நம்மால் எதுவும் செய்ய இயலாது. யாவற்றிற் கும் இறைவனது திருவருள் துணை வேண்டும். அதுவே ஈண்டு நந்தி அருளது எனப்பட்டது. சிவத்தைக் கூடுதற்குமுன் சக்தி யின் திருவருளை முன்னர் அடைதல் வேண்டும். அதனுல்தான் ஞானத் தலைவியை நண்ணுவர் எனப்பட்டது. -

திருமந்திரம் சிவனும் இறைவன் ஒருவனேயே உணர்த்தும்

30. மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த மூவா யிரக்தமிழ் மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் ருமே!

(இ.ள்) திருமூலர் திருவாய்மலர்ந்தவை, முப்பது உபதேசமானலும், மு. ந் நூ று மந்திரங்களானலும், மூவாயிரம் தமிழ் மந்திரங்களானலும் மூன்றும் சிவபெரு மானை பரம்பொருளாம் ஒருவனையே உணர்த்தும் இயல்பினை உடையவை ஆகும்.

(அ - சொ) ஒன்று - ஒப்பற்ற பரம்பொருளை உணர்த்தும் ஒரு கருத்து.

(விளக்கம்) திருமூலர் திருவாய்மலர்ந்த திருமந்திரங்கள் மூவாயிரத்தையேனும், முந்நூறையேனும், முப்பதையேனும் நாம் உணர்ந்தாலும் ஒரு பரமனயே உணர்த்தும் ஒரே கருத்துடையன என்பதே இங்குக் கூறப்பட்டன,