பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

##4

அழகிய ஈண்டு நல்லதென்னும் பொருளில் உளது. கருமம் . காரியம். சந்தி - சந்தியாகாலம் (காலை, மாலை) சடங்கு . காரியம். அறுப்போர் - வரையறுத்துச் செய்பவர்; தடை இன்றிச் செய்பவர்.

(விளக்கம்) அந்தணர் என்பவர் அறவோர் ஆவார். திருவள்ளுவர் கருத்தும் இதுவே. வேதம் ஒதுதலும், பிறரை ஒதும்படி செய்தலும், யாகம் புரிதலும், யாகம் செய்யுமாறு செய்தலும், பிறர்க்குக் கொடுத்தலும், தாமும் பெறுதலும் ஆகிய தொழில்கள் ஆறுதொழில்கள். வெறும் தீக்கும் ஒமத் தீக்கும் வேறுபாடு தோன்ற செந்தி எனப்பட்டது. ஒமத்தி கெடாது பாதுகாவலுடன் செய்யவேண்டுதலின் ஓம்பி என்றனர். சந்தியாவந்தனங்களைக் காலை மாலை என்ற இரண்டு வேளைகளிலும் செய்வதோடு உச்சிப்போதும் செய்யவேண்டியது நியமம். ஆதலின் முப்போதும் நியமம் செய்து என்றனர். பகலில் செய்யப்படும் நியமம் மாத்தியான்னிகம் எனப்படும். இந்தப் பண்புகள் இல்லாதவர் அந்தணர் என்று கூறிக் கொள்ளத் தகுதி அற்றவர்கள் என்பது இங்கு நன்கு விளக்கப் .lتي-ساس قسt

யார் பார்ப்பனர்?

65. பெருநெறி யான பிரணவம் ஒர்ந்து

குருநெறி யாம்உரை கூடிநால் வேதத் திருநெறி யான கிரியை இருந்து சொருபம தானேர் துகளில்பார்ப் பாரே.

(இ - ள்) மோட்ச உலகை அடைதற்குரிய பெரிய வழி யாக உள்ள ஓர் எழுத்து ஒரு மந்திரத்தைத் நன்கு உணர்ந்து, குரு உபதேசித்த மந்திர உரைப்படி தியானம் கூடி, நால் வேதத்தில் கூறிய சிறந்தவழியாகிய கிரியையில் இருந்து, சிவவடிவாய் விளங்குபவரே குற்றம் அற்ற பார்ப் பாா ஆவாா,