பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

i82

செல்வத்தையும் அடைய விரும்பினால், தன்னை மறந்த நிலையிலும் அரசன் தரும நெறியிலேயே ஒழுகித் தன் கடமைகளை ஒழுங்குறச் செய்யவேண்டும். சிறந்த நீரால் சூழப்பட்ட உலகில் செய்யும் தொழில்கள் அனைத்தையும் சொல்லுமிடத்து, அத்தொழிலால் பெறும் ஊதியத்தில் ஆறில் ஒரு பங்கே பெறும் உரிமையுடையவன் அரசன் ஆவான்.

(அ- சொ) திறம் - வகை. முத்தி - மோட்ச இன்பம். ஆற்றல் - செய்தல். நீர் - நீர் பெற்ற கடல். ஞாலம் - உலகம். அறைந்திடில் - சொன்னல்.

(விளக்கம்) இந்திரபோகம் பிரம்மபோகம் விஷ்ணு போகம் பெறுதல் பத முத்தி எனப்படும். சிவபோக நுகர்வு பரமுத்தி எனப்படும். சுந்தரர் தம்மை மறந்த திலையிலும், நாவினுல் நமசிவாய என்று கூறுவது போல, அரசனும் மறந்த நிலையிலும் அறநெறியைக் கடைப் பிடித்தல் வேண்டும். இல்லறத்தான் தனது வருவாயைப் பிதுர்க்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் ஆகிய இந்த ஐவர் பொருட்டுச் செலவு செய்யப் பிரித்தபின், அரசனுக்கும் ஒரு பங்கை ஒதுக்குவன். அதை அரசன் பெறுதல் வேண்டும்.

கட்குடியரை அரசன் தண்டித்தல்வேண்டும்

76. கால்கொண்டு கட்டிக் கணல்கொண்டு மேல்ஏற்றிப்

பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணுதோர் மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல்கொண்டு தண்டம்செய் வேந்தன் கடனே.

(இ - ள்) பிராணவாயுவைக் கட்டி, மூலாக்கினியைப் பிரம்மரந்திரம் வரை ஏற்றியபோது, மூலாதாரத்திலிருந்து ஒழுகும் சந்திர பானமாம் அமுதைப் பருகாமல், மயக்கம் கொண்டு கள்ளைக் குடிக்கும் மருட்சி உடையவர்களைத் தண்டித்தல் அரசனின் கடமையாம்.