பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

174

காசியில் யானை வடிவுடன் வந்த கயாசுரனைக் கொன்று அதன் தோலை மேலே போர்த்துக் கொண்டனன். ஆகவே: இறைவன் கரியுரியான் எனப்பட்டான். இறைவன் தன்னை நினைவாரது மனத்தாமரையில் விரைந்து சென்று தங்குவது இயல்பு. ஆதலின் கமலமலர் உறைவான் எனப்பட்டான்: மலர்மிசை ஏகினன் என்பது இக்கருத்தைப் பற்றியதே.

கற்றவரே பேரின்பம் பெறுவர் 93. பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்

முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகில் கிளர்ஒளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுகின் ருரே. (இ - ள்) பற்றுக் கோடாகப் பற்ற வேண்டின் சிவமாம் இறைவனைப் பற்றுங்கள். முதல்வனம் சிவனைப் பற்றின் எல்லாம் முற்றுப்பெறும். தேவர்கள் இந்த உபாயத்தினை அறிந்தவர் ஆவர். ஆகவே கற்றவர் பேரின்பம் உற்றவர் ஆவர்.

(அ - சொ) பற்றது - பற்றக் கோ டா க. முற்றது . முடிவுறும். கிற்ற - வல்ல. விரகு தந்திரம்.கிளர் - விளங்கும். வானவர் - தேவர்.

(விளக்கம்) பற்ற வேண்டிய பொருள் பரமன். அவனைப் பற்றின் எல்லாம் முடிவுறும். இந்த உபாயம் அறிந்து தேவர் பற்றினர். ஆகவே கற்றவர் பேரின்பம் அடைவர் என்பதாம்.

கேள்வியால் சிவகதி அடையலாம் 94. அறம்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறம்கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் புறம்கேட்டும் பொன்னுரை மேனினம் ஈசன் திறம்கேட்டும் பெற்ற சிவகதி தானே. (இ - ள்) நீதிகளைக் கேட்டும், அந்தணர்தம் அறிவுரை களைக் சேட்டும், பாவம் இவை என்பதை நூல்வழி