பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

歴塾選

மறைப்பு ஏற்படினும் சிவனத் தியானம்செய்யின் அவன் அருள் கிட்டும் 119. ஒளித்துவைத் தென்னுள் உறஉணர்ந் தீசன வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியும் ஆமே. (இ - ள்) ஈசனை என் உள்ளத்தில் மறைத்து வைத்து நன்ருகத் தியானம் செய்யின், அவன் இவ்விடத்திலேயே வெளிப்பட்டு நின்று அருள் செய்வான். மகிழ்வுடன் தலை அன்பாம் காதன்மை வெளிப்பட நாம் வணங்கிளுல், நமது விருப்பம் நிறைவேறும்.

(அ சொ) ஈண்டே - இவ்விடத்திலேயே. காதன்மை . தலை அன்பாம் காதன்மை. இறைஞ்சினும் - வணங்கிளுல் வேட்சி - வேட்கை.

(விளக்கம்) இறைவன் உள்ளத்திருந்தும் ஒளிந்து இருப்பன். அப்போது அவனே வெளிப்படுத்த தலை அன்பு கொண்டு தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவன் வெளிப்படுவான். அவனே வணங்கவும் வேண்டும். வணங்கினுல், அவன் நாம் விரும்பியதைத் தருவான். கலந்திருந்தும் தன்னைக் காட்டாமை இறைவன் பண்புகளுள் ஒன்று 120. மண்ஒன்று தான்பல் கற்கலம் ஆயிடும்

உண்கின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே கண்ஒன்று தான்பல காணும் தனக்காண அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் ருனே. (இ - ள்) மண் ஒன்றுதான். ஆனல் அதுவே A #&# பாத்திரங்களாகச் செய்யப்படுகிறது. அதுபோல இறைவன்

த.-13