பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

igá

ஒருவனே எல்லா யோனிகளாயும் இருப்பன். கண் ஒன்றே எல்லாவற்றையும் காணும்; ஆளுல் தன்னைக் காட்டாது. அதுபோலவே இறைவனும் எல்லாமாய் இருந்தும் தன்னக் காட்டாமல் நிற்பன்.

(அ சொர் கலம் - பாத்திரம். யோனிகள் . பல்வேறு வகையான உயிரினங்கள். அண்ணல் - இறைவன். அவ் வண்ணம் - அந்தவிதம்.

(விளக்கம்) மண் பல கலமாவது போல, இறைவன் பல யோனியாக நிற்கிருன். கண் பிறபொருளைக் காட்டித் தன்னக் காட்டாது. அதுபோல இறைவனும் பிறவற்றைக் காட்டித் தன்னைக் காட்டான் என்பதாம். ஆளுல் அவனைக் குருவருளால்

ö了砾了@打廷f 岔6〔。 - - - -

இறைவன் உடலப் படைத்தற்குத் திருவருள் காரணம்

121. எட்டுத் திசையும் அடிக்கின்ற காற்றவன்

வட்டத் திரையனல் மாநிலம் ஆகாசம் ஒட்டி உயிர்கிலை என்னும் இக் காயப்பை கட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் கானுமே.

(இ - ள்) எட்டுத் திசைகளிலும் வீசுகின்ற காற்றும் உலகை வட்டமாகச் சூழ்ந்த நீரும், நெருப்பும், பெரிய மண்ணும், ஆகாயமும் ஆகிய ஐம்பூதங்களேயும் ஒன்று சேர்த்து உயிர்நிற்கும் இடமாகிய இவ்வுடம்பைச் சுருக்கி யும் விரித்தும் அருள் செய்பவன் நெற்றிக் கண்ணணும் சிவனே ஆவான். -

(அ - சொ) திரை - அலே, ஈண்டு அலையுடைய கடல். இக்கடலும் நீரை உணர்த்துகிறது. அனல் - தீ. மா.பெரிய, நிலம்-ஈண்டு மண் என்னும் பொருளது. காயம் - சரீரம்.