பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

荔憩

கரு ஆண் பெண் என அறியும் விதம் 129. குழவியும் ஆணும் வலத்தது ஆகில்

குழவியும் பெண்ணும் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.

(இ -ள்) புணர்ச்சிக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணு கும் பிராணன் வலப்பக்க நாசி வழி வந்து கொண்டிருந் தால் ஆண் குழந்தையும், இடமுக்கு வழியே வந்து கொண்டிருந்தால் பெண் குழந்தையும், அபாணவாயுவுடன் போரிட்டால் இரட்டைக் குழந்தையும், வலப்பக்க இடப் பக்க மூச்சுச் சமமாக வந்துகொண்டிருந்தால் அலியாயும் குழந்தை பிறக்கும்.

(அ- சொ) குழவி - குழந்தை. வலத்தது - வலமூக்கின் வழி வரும் மூச்சு. இடத்தது ஆகில் - இடப்பக்கமாக மூச்சு வரின். அபானன் - ஒருவகைக் காற்று. அலி - ஆண்தன்மை அற்றது. வலமூக்குத் துவாரம் வழி வந்துபோகும் காற்றுச் சூரியகலை என்றும் இடப்பக்கம் வரும் காற்று சந்திரகலை என்றும் கூறப்படும்.

குழந்தை பிறவாமைக்குக் காரணம் 130. கொண்டகல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும் கொண்டால் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யார்க்கே. (இ - ள்) தாய் தந்தையர் இருவருக்கும் பிராணவாயு சரிசமமாகி ஒத்து நடமாடின், கருவுள்கொண்ட குழந்தை அழகாக இருக்கும். ஆனல் இருவர்தம் பிராணவாயுவும் புணர்ச்சியால் தடுமாற்றத்தை அடைந்தால் குழந்தை கருவில் இல்லாமல் போகும்.

(அ - சொ) எழில் - இயங்கில்ை. கோமளம் - அழகு. கோல்வளையார் - திரண்ட வளையல் அணிந்த பெண்கள்.