பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

40%

(இ - ள்) தாயாரின் கருவில் விந்தாகிய வித்தினை இட்ட தந்தையாரும், குழவி பிறக்குமா பிறக்காதா என்று அறிந்திலர். அவ்வாறே விந்துவை ஏற்ற தாயாரும் எதையும் கண்டிலர். ஆனல் உண்மை இன்னது என்பதைப் பிரம்ம தேவன் அறிந்தும் யாருக்கும் கூறிலன். உண்மையினை உணர்த்தும் பரசிவப்பொருளும் உயிருக்கு உயிராய் அங்கு உளன். இவ்வாறு சிருட்டிக்கும் மாயையின் கீழ்மையினை நினைக்க நினைக்க வியப்பாகிறது. -

(அ- சொ) இட்டார் - விந்துவைத் தாயின் கருவில் இட்ட தந்தைமார். ஏற்றவர் - இட்ட விந்தை ஏற்ற தாய்மார் தட்டான் - பிரம்மதேவன். பட்டாங்கு - உண்மை. பரமன் - சிவன். கீழ்மை - தாழ்வுடைச் செயல்.

(விளக்கம்) இப்பாடல் மாயையின் கீழ்மைத் தன்மை யினைக் கூறுகிறது. தந்தையும் தாயும் அறியாத நிலையில் சிருஷ்டிக்க முன்வருதலின், மாயையின் செயலைக் கீழ்மைச் செயல் என்கிரு.ர். தட்டு என்பது பூவிதழ்த் தண்டு அது தாமரையைக் குறிக்கிறது. ஆகவே, அதன்மீது உள்ளவன் பிரம்மன் ஆதலின், அவன் தட்டான் எனப்பட்டான்.

பிறந்த உயிர் பரகதி அடைதலும் கூடும் 133. இன்புற நாடி இருவரும் சந்தித்துத்

துன்புறு பாசத்தின் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி கிலத்தின்முன் தோன்றிய தொன்புற நாடிகின் ருதலும் ஆமே. (இ - ள்) காதலன் காதலி ஆகிய இருவரும் இணைந்து இன்புறல் நாடியபின் கரு உண்டாகும். பின்பு துன்புறும் பாசமாகிய பந்தத்தில் கட்டுண்டு தோன்றி வளரும். பிறகு மேலாக இருக்க விரும்பி, நிலத்தில் பிறந்த அவ்வுயிர்கள் பழம் பிறவியின் வினையால் வந்த இன்ப துன்பங்களை ஆராயும். ஆராய்ந்தபின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒதி ஆக்கத்தை அடைதலும் கூடும்.