பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

13

பட்டி மண்டபத்தார் பொருட்டு, நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம்' என்று விளக்கம் காட்டினர். ஈண்டு, தீர்க்க என்பது உயிர்பெற்று எழுக என்பதையும், ஆனந்தம் சேர்க என்பது இறக்க என்பதையும் குறித்து நிற்கின்றன.

திருஞானசம்பந்தர் பாடல்களில் ஒன்ரும்,

செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐய னேஅஞ்சல் என்றருள் செய்யெனப் பொய்ய ராம் அம ணர்கொளு வும்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே என்பது, பாண்டியனை வெப்பு நோய் பற்றுமாறு பணித்த பாடலாகும்.

வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஒங்குக ஆழ்க தீய தெலாம்அரன் நாமமே சூழ்க வைய கமும்துயர் தீர்கவே என்பது, பாண்டியன் நெடுமாறனது கூன்நிமிரக்கருணையுடன் கூறியதாகும்.

வேதங்களால் பூசிக்கப்பட்டுப் பின் சாத்தப்பட்ட திருமறைக்காட்டுக் கோயில் கதவை, அப்பர். அரக்க னைவிர லால்அடர்த் திட்டநீர் இரக்கம் ஒன்றிலிர் எம்பெரு மான்நீரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கதவம்திறப் பிம்மினே - என்று பாட, மூடி இருந்த கதவு திறக்கப்பட்டது.

சுந்தரர் அவிநாசி என்னும் தலத்தைத் தரிசிக்க வந்த போது, தம் பிள்ளையை முதலே உண்ட காரணத்தால் அழுது கொண்டிருந்த பெற்றேர்கள் மகிழும் வண்ணம், இறை வனை நோக்கி, -