பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

荔藻

எண்ணமே போய்விடுகிறது. இதஞல் அத்தகையவர்கட்கு ஆக்கம் உண்டாகாமல் அழிவே ஏற்படுகிறது. உலக இன்பங் களைத் துய்த்துக்கொண்டு, கடவுள் ஒருவன் உளன். நாம் அவனுக்கு அடிமைகள், என்ற உணர்ச்சி இருக்குமானல், எந்நாளும் இன்பமே; துன்பம் இல்லை. இன்பம் எய்தியவர்கள் நாயன்மார்கள்; அடியார்கள். .

எழுத்தறிவித்தவனை இகழ்ந்தவர் அடையும் கதி

155. ஓர்எழுத் தொருபொருள் உணரக் கூறிய சீர்எழுத் தாளரைச் சிதையச் செப்பிஞேர் ஊர் இடைச் சுணங்களுய்ப் பிறந்தங் கோருகம் பார்இடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணிலே. (இ - ள்) ஒர் எழுத்தையேனும் உள்ளம் உணரும் வகையில் கூறிய சிறப்புடைய எழுத்தாளராகிய குருவை மனம் நோகும் வண்ணம் நிந்தனை பேசியவர்கள், ஊரில் நாயாய்ப் பிறந்து அழிவர். இங்ங்ணம் ஒரு யுகம் திரிவர்; பிறகு புழுவாய்ப் பிறந்து மாய்வர்.

(அ കെi് எழுத்தாளர் - குரு. சிதைய- மனம் முறிய. சுணங்கு - நாய். பார் - பூமி, கிருமி - புழு. படிவர் - பிறப்பர். (விளக்கம்) எழுதிக் கற்பிப்பவர் ஆதலின் குரு எழுத்தாளர் ஆயினர். ஆசிரியர் மனம் நோகப் பேசக்கூடாது என்பது ஈண்டுக் கருத்து. நாயாய்ப் பிறப்பர் என்றது அலேந்து அலைந்து அழிவர் என்பதாம். புழுவைப் பிறர் சாக அடிக்க வேண்டும் என்பது இல்லை. அதுதானே விரைவில் அழியும் தன்மையது. அதுபோலக் குரு நிந்தை புரிந்தவன் தானே அழிவன் என்பதாம். ஊர்ச்சுணங்கன் என்றது எவர்க்கும் சொந்த மாகாத நாய். அதற்கு ஏதேனும் துன்பம் வரின் அதனை எவரும் கவனியார். அதுபோல இவனும் பிறர் உதவி இன்றி அழிவன். ஒர் எழுத்து ஒரு பொருள் என்பதைப் பிரணவ எழுத்தின் ஒப்பற்ற பொருளே என்று பொருள் பண்ணினும் பொருத்தமே.