பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

篡常

இறைவனைப் பகைக்கக் கூடாது

153. அப்பகை யாலே அசுரரும் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகை ஆகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. (இ - ள்) அசுரரும் தேவரும் இறைவனிடம் பகை கொண்டமையால் அழிந்தனர். பகை கொண்டவர் இறைவனே அடைய முடியாது. ஒரு பகை பத்துப் பகை யாகப் பெருகி அழிவே ஏற்படும்.

(அ - சொ) எய்தார் - அடையார். (விளக்கம்) இறைவனிடம் பகை கொண்டவர் அழிந்தமை யினைத் தட்சன் அழிவுகொண்டு தெளியலாம். இதனல் விளையாட்டர்கவும் இறைவனைப் பகைக்கக் கூடாது என்பது பெறப்படுகிறது.

நாமே பிரம்மம் என்பவர் ஈசனை மறப்பர்

154. போகமும் மாதர் புலவி யதுகினந்து

ஆகமும் உள்கலங் தங்குளன் ஆதலின் வேதியர் ஆயும் விகிர்தன்காம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. (இ - ள்) வேதியர் வேதம் உணர்ந்தவர். அவர் உலக இன்பத்தில் ஈடுபட்டு மாதர்களின் ஊடலால் உண்டாகும் தாகமும் கொண்டு விளங்கி, நாமே பிரம்மம் என்று எண்ணி வாழ்பவர். அத்தகையவர் இறைவன் ஒருவன் உளன் என்னும் நினைப்பை அடியோடு மறந்தவர் ஆவர். (அ - சொ) போகம் - மாதர் இன்பம். புலவி - மனைவி கணவனிடம் கொள்ளும் சிறுசச்சரவு. ஆகம் - உடல் விகிர்தன் - நாமே பிரம்மம். - -

(விளக்கம்) நாமே கடவுள் என்ற உணர்ச்சி புண்டான போது, நமக்கு அப்பால் ஒரு பரம்பொருள் இருக்கிறது என்ற