பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

24?

வலைப்பட்டு இருந்திடும் என்றனர். கோபம் தவத்தையும் அழிக்கும் என்பதை ஈண்டு அறியவும். மனம் எப்போதும் அலையும் தன்மையது. அதுவும் தியான நிலையில் அசையாது இருந்திடும் என்பதைத் துலைப்பட்டிருந்திடும் என்றனர்.

சமாதி கிலேயே சித்தியும் யோகமும் எனல்

188. சமாதி செய்வார்க்குத் தரும்பல யோகம் சமாதிகள் வேண்டா இறையுடன் ஏகில் சமாதிதான் இல்லை தான்.அவன் ஆகில் சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. (இ - ள்) சமாதி செய்பவர்கட்குப் பல யோகங்கள் சித்தியாகும். ஆல்ை இறையுடன் ஒன்றி இருக்கின் சமாதி வேண்டுவதில்லை. சிவனும் சீவனும் ஒன்ருகில் சமாதி வேண்டா. சமாதியில்ை அறுபத்து நான்கு சித்திகளும் உண்டாகும்.

(அ - சொ) எட்டெட்டு அறுபத்து நான்கு. (விளக்கம்) பல யோகங்கள் என்பன: மந்திரயோகம், பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம் முதலான யோகங்கள். எட்டு எட்டும் சித்திகள் ஆவன, அறுபத்து நான்கு கலைகள். அல்லது எட்டுவகைச் சித்திகளும் எனலாம். அவையே அணிமா மகிமா முதலியன.

இயமத்தால் ஏற்படும் பயன்

139. போதுகங் தேறும் புரிசடை யான்அடி

யாதுகந் தார்.அம ராபதிக் கேசெல்வர் ஏதுகந் தான் இவன் என்றருள் செய்திடும் மாதுகந் தாடிடும் மால்விடை யோனே!

g;.—15