பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

#45;

தேவர்கள் இவன் யார் என்று கேட்க, அதுபோது, அவனது பெருமை அறிந்த அங்கிருந்தவர் இவன் சிவனே என்று கூற, உடனே அழகு மிக்க தேவர்கள் யாவரும் இவனை எதிர்கொள்ள, நீலகண்ட மூர்த்தியை நேரே. காணும் வாய்ப்பினைப் பெற்றவர் ஆவார்.

(அ - சொ) சேர்உறுகாலம் - சிவலோகம் சேரும் காலம். திசைநின்ற தேவர்கள் - எட்டுத்திசைகளிலும் இருந்து காக்கும் தேவர்கள். அரன் - சிவன். ஏர் - அழகு. உறு - பொருந்திய, கார் - கருமை: கண்டு விஷம். மெய் உண்மையில்.

(விளக்கம்) பிரத்தியாகாரம் என்ற சொல் ஈண்டு இல்ல்ை யாயினும் அமைப்புமுறை நோக்கி அச் சொல் கூறப்பட்டது. பிரத்தியாகாரமாவது பிராணவாயுவைத் தன் வழியில் திருப்புதலாகும் பிரத்தியாகாரத்தார் சிவலோகம் எய்துவர் என்பதும், சிவனை நேரில் காண்பர் என்பதும் ஈண்டுப் பெறப் பட்டன. நான்கு திசைகட்கும், ஒவ்வொரு திசையின் மூலைக்கும் ஒவ்வொரு தேவர்கள் இருந்து காப்பர் என்பது மரபு. இவர்கள் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். தேவர்கள் இயற்கையில் அழகர் ஆதலின் ஏர் உறு என்றனர். இறைவனது கழுத்து விஷத்தை ஏற்று இருத்தவின் கார் உறு கண்டம் ஆயிற்று. திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான விடத்தை இறைவன் ஏற்றுத் தேவர்களைக் காத்தனன் என்பது புராணம்.

தாரணைப் பயன் இஃது எனச் சாற்றல் 194. கல்வழி நாடி மன்வழி மாற்றிடும் -

சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்திசைப் பல்வழி எய்தினும் பார்வழி ஆகுமே. * . . . . (இ - ள்) யோக நூலில் சொல்லப்பட்ட நெறிகளில் சிறிதும் குறையாமல், நல்வழியாகிய தாரணப் பயிற்சி யினை நாடி, அதன் முறைப்படி நடக்க, யமன் தேடிவரும்