பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

244

பிராணயாமப் பயனைப் பகர்தல்

192. செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக் கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள எம்பொன் தலைவன் இவனும் எனச்சொல்ல இன்பக் கல்வி இருக்கலும் ஆமே. (இ - ள்) செம்பொன் போலும் கிவபெருமானது உலகாம் சிவலோகம் சென்று அடையும் காலத்தில், பூரண கும்பத்துடன் தேவர் கூட்டம் வந்து எதிர்கொள்ள, எமது பொன்போலும் போற்றத்தக்க தலைவன் இவன் எனப் பிராணயாமப் பயிற்சியுடையவனேப் புகழ்ந்து சொல்ல இன்பச் சேர்க்கையுள் எக்காலத்தும் இருக்கலாம். (அ - சொ) சிவகதி - சிவலோகம். எய்தும் - அடையும். கும்பம் - பூரணகும்பம். அமரர் - தேவர். குழாம் - கூட்டம். கலவி - சேர்க்கை. - * -

(விளக்கம்) ஈண்டுப் பிராணயாமம் என்ற சொல் இல்லை யாயினும், முறை வைப்பின்படி அதன் பயனே ஈண்டுக் கூறப் பட்டது எனத் தெளிக. பிராணயாமத்தாரையும் தேவர் எதிர் கொள்வர் என்க. தக்கவரை வரவேற்கையில் பூரணகும்பம் எடுத்து வரவேற்றல் சமய மரபாகும். பிராணுயாமம் என்பது காற்றை உள்ளே இழுத்து நிறுத்தி முறைப்படி வெளிவிடுதல் என்பது முன்பே கூறப்பட்டது. -

பிரத்தியாகாரத்தின் பயனை இயம்பல் 193. சேருறு காலம் திசைகின்ற தேவர்கள் -

ஆரிவன் என்ன அரணும் இவன்என்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள காருறு கண்டனை மெய்க்கண்ட வாறே. (இ, ள்) பிரத்தியாகாரப் பயிற்சி முதிர்ந்து சிவ லோகம் சேரும் தருணம், திக்குப்பாலகர்களாய் நின்ற