பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

#53

படுத்தவேண்டும். அதனை வயப்படுத்துவதையே திரிந்து என்ருர். ஐந்து மலங்களாவன, ஆணவம், கன்மம், 4ק6קפtu , மாயேயம், திரோதாயி என்பன. சிதம்பரம் என்பது ஞானகாயம்; இதுவே சிதாகாயம் ஆகும். திருநடத்தோரே என்றது, இறைவனது ஆனந்தக் கூத்தைக் கண்டு தாமும் ஆனந்தக் கூந்தாடுவர் என்பதாம்.

உடலும் உயிரும் நீடு வாழ வழி

203. ஒத்தஇவ் ஒன்பது வாயுவும் ஒத்தன

ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன் ஒத்தஇவ் ஒன்பதில் ஒக்க இருந்திட ஒத்தஉடலும் உயிரும் இருந்ததே. (இ - ள்) தம்முள் மிகுதல் செய்யாமலும் குறைதல் செய்யாமலும் சமமான ஒன்பது வாயுக்களும் தம்முள் ஒத்தன. இவ்வாறு தம்முள் ஒத்த ஒன்பது வாயுக்களிலும் சிறந்த தனஞ்சயன் என்னும் வாயும், ஒன்பது வாயுக்களும் ஒன்பது நாடிகளில் சமமாக இருந்தால், உடம்பும் உயிரும் தம்முள் ஒத்து நீண்டகாலம் இருக்கும்.

(அ - சொ) வாயு - காற்று. தனஞ்சயன் - தனஞ்சயன் என்னும் வாயு. ஒக்க - சமமாக.

(விளக்கம்) ஒன்பது வாயுக்களாவன: பிராணன், அடானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் என்பன. இவற்றுடன் தனஞ்சயன் கூட்ட, வாயுக்கள் பத்தாகும். இவை முறையே கூடி இருக்கும் இடங்கள் இடகலை, பிங்கலே, சிங்குவை, புருடன், காந்தாரி, ஆத்தி, அலம்புடை சங்கினி, குரு, சுழுமுனை என்பது: இவற்றையே தசநாடிகள் என்பர். இவை சமமாக நாடிகளில் இருப்பின் உடலுக்கு அழிவில்லை; உயிருக்கும் அழிவில்லை. இடகலை இடப்பால் நர்ம்பு. பிங்கல வலப்பால் நரம்பு சுழுமுனே நடுநரம்பு, புருடன் உள்நாக்கு நரம்பு. காந்தாரி அலக்கண் தரம்பு, அத்தி இடக்கண் நரம்பு, அலம்புடை'வ்வச்