பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

254

செவி நரம்பு. சங்கினி இடச்செவி நரம்பு, குரு எருவாய் நரம்பு. (எருவாய் என்பது மலம் தள்ளும துளை)

உடல் வீங்கி வெடித்தற்குக் காரணம் 204. இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலின்

இருக்கும் இருநூற்று இருபத்து நான்காய் இருக்கும் உடலில் இருந்தில ஆகில் இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே. (இ - ள்) முன்னே சொல்லப்பட்ட ஒன்பது காற்றுக் களைப் போலத் தனஞ்சயன் என்னும் காற்றும் நடுநாடியில் இருக்கும். மாயா காரியமாக இருக்கும் இநூற்று இருபத்து நான்கு உலகங்களில் இருக்கும். உடலிலும் இக்காற்று இருக்கும். இது இல்லையாயின் இருக்கும் இவ்வுடல்கள் வீங்கி வெடித்து விடும். -

(அ - சொ) தனஞ்சயன் - காற்றின் பெயர். கால்.காற்று. (விளக்கம்) தன்ஞ்சயன் என்னும் காற்று இருக்கும் நடுநாடி, அதாவது சுழுமுனே. ஒன்பது என்பது ஒன்பது காற்றுக்களேயாகும். இருநூற்று இருபத்து நான்கு என்பது மாயாகாரிய உலகங்களைக் குறிக்கும். -

தனஞ்சயன் காற்று மாறுபடின் வரும் துன்பங்கள் 205. வீங்கும் கழல் சிரங்கொடு குட்டமும்

வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமும் கூனும் முடம்அதுஆம் வீங்கு வியாதிகள் கண்ணின் மருவியே. (இ - ள்) வீங்கும் வேணல் கட்டி, சிரங்கு, கொடிய குஷ்டரோகம், வீக்கங்கள், சோகை, பல வாதநோய்கள், கூன், கால்கை குறை, கண் வீக்கம் முதலான நோய்கள் தனஞ்சயன் மாறுபட்டால் உண்டாகும். -

(அ சொ) கழலே - உஷ்ணக்கட்டி குட்டம் - குஷ்ட ரோகம். முடம் - கைகால் குறைவு. மருவி சேர்ந்து.