பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

விட்டுத் திருவாவடு துறையினே அடைந்தார். அப்படி அடைந்தவர், திருவாவடுதுறைச் செம்பொன் தியாகரை வணங்கி, வெளியே மேற்குத் திசையில் அரசமரத்தடியில் இறைவனைத் தம் உள்ளக்கமலத்தில் கொண்டு சிவயோக நிலையில் அமர்ந்திருந்தார். அப்படி அமர்ந்து, ஊன் உடம்பில் இருந்து கொண்டே பிறவித் துன்பத்தைப் போக்கலாம் என்பதை உலகத்தார் அறியச் செய்து, சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கும் தெரிய வரும் முறையில், ஆண்டுக்கு ஒரு மந்திரமாக, மூவாயிரம் மந்திரங்கள் அடங்கிய திருமந்திர மாலை என்னும் நூலைச் செய்தருளினர். அம்மூவாயிர மந்திரங் களில் முதல் மந்திரத்தின் தொடக்கமாக,

ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள்

கின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன ஆறு விசிததனன் ஏழுபார்

சென்றனன் தான் இருந் தான்உணர்ந் தெட்டே என்று பாடி, மூவாயிரம் ஆண்டுகள் இந்நில உலகில் வாழ்ந்து, அதன் பின் திருக்கயிலை அடைந்தனர். இந்த வரலாறு சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தைத் தழுவி எழுதப் பட்டது.