பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

&*酶

பஞ்சாட்சரப் பெருமை 226. செம்புபொன் ஆகும் சிவாய நமஎன்னில்

செம்புபொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்புபொன் ஆகும் நீயும் கிரீயும்எனச் செம்புபொன் ஆன திருஅம்பலமே. (இ - ள்) மகாமந்திரமாகிய சிவாயநம என்று இடை விடாது சொல்லி வந்தால் செம்பும் பொன்னக மாறும். இவ்வாறு செம்பு பொன்னகத் திரண்டதே சிற்பர்மாகும். (அதாவது சிவன் அருள் ஆகும்.) பூரீம், கிரீம் என்னும் சக்தியின் பீஜ மந்திரத்தைச் சொல்லி வந்தாலும், செம்பு பொன்னகும். செம்பு பொன்னை நிலேயே சிதம்பரத்தின் திரு அம்பலம் ஆகும்.

(அ - சொ) சிற்பரம் - சிவனது மேலான அருந்திருவம்பலம். சிதம்பரத்தில் இறைவன் திருநடம்புரியும் சபையாகும்.

(விளக்கம்) செம்பு பொன்ஞகும் என்றது, வெறும் உலோகம் ஒன்று ஒன்முக மாறும் என்பது மட்டும் அன்று. உயிர் சிவமாகும் என்பதை அறிவதே ஆகும். பஞ்சாட்சர மந்திரத்தைப் போலத் தேவி மந்திரமும் சிறப்புடையது. ஆதலின், அவையும் உடன் சேர்த்துக் கூறப்பட்டன.

ஐந்தெழுத்தின் மாண்பு 227. வாறே சிவாய நமச்சி வாயநம

ஆறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லே வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே. (இ - ள்) முன் மந்திரத்தில் கூறப்பட்ட பஞ்சாட்சரத் தைச் செபிக்கின்ற முறை யாது எனில், சிவாயநம சிவாயநம என்று இடைவிடாது செபித்தல் ஆகும். அவ்வாறு செபித்தால் வரக்கூடிய பிறப்பு உண்டாகாது,