பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

(விளக்கம்) பூசைக்குரிய மலர்கள் இன்னின்ன என்பது

விளக்கப்பட்டது. ரோஜாப்பூ கனகாம்பரம் முதலான மலர் களைச் சூட்டுதல் மரபன்று என்பதை உணரவும்.

பூசைக்குரிய வாசனைப் பொருள்கள்

232 சாங்கம தாகவே சக்தொடு சக்தனத்

தேங்கமழ் குங்குமம் கற்பூரம் கார்அகில் பாங்கு படப்பணி நீரால் குழைத்து வைத்து ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

(இ - ள்) முறையாகக் கத்துாரி, புனுகு முதலிய சாந்துடன் கூடிய சந்தனம், இனிய வாசனையுடன் கூடிய குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கார்அகில் குழம்பு ஆகிய இவற்றை அழகுபடப் பணி நீரால் நன்கு குழைத்துச் சாத்தி அன்புடன் அர்ச்சிக்கவும்.

{அ - சொ) சாங்கமதாக முறையாக. சந்து - புனுகு கத்துரி முதலிய சாந்து. தேம் - இனிமை. பாங்கு - அழகு.

(விளக்கம்) குங்குமப்பூ நல்ல மனமுடைமையின் தேம் கமழ் குங்குமம் எனப்பட்டது. அகில் என்பது சந்தனக்கட்டை போல மணம் தருவது. அது கருநிறத்துடன் இருப்பது ஆதலின் கார் அகில் எனப்பட்டது. பனிநீர் என்பது ரோஜாவின் மணமுள்ள நீர் அன்று: தூயநீர், அதாவது நேரே ஆகாயத் திலிருந்து விழும் மழை நீரே ஆகும்.

வழிபடும் முறையும் பயனும்

233. அன்புட னேகின் றமுதமும் ஏற்றியே

பொன்செய் விளக்கும் புகைதீபம் திசை தொறும் துன்பம் அகற்றித் தொழுவோர் கினையுங்கால் இன்புட னேவங் தெய்திடும் முத்தியே.